வெள்ளி, 20 மார்ச், 2009

ரஹ்மானுக்கு கிடைத்த ஆஸ்கர் ;எரிச்சலில் கமல் -சாரு நிவேதா

சாரு

சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு பேட்டியில் கமல்ஹாசனிடம் ஆஸ்கர் விருது பற்றிக் கேட்ட போது ”ஆஸ்கர் பரிசு பெற்றப் படங்கள் அமெரிக்க அளவுகோலுக்கு ஏற்ப எடுக்கப் பட வேண்டியுள்ளது. நான் இந்திய அளவுகோலைப் பின்பற்றுகிறேன். என்னிடம் ISI மார்க் உள்ளது; எனக்கு எதற்கு ASI மார்க்?” என்று பதில் அளித்துள்ளார். உண்மையில் நல்ல சினிமாவை இவ்வாறு வகைப்படுத்த முடியுமா?

அன்புடன்

அரவிந்தன் சொக்கன்.

********************

அன்புள்ள அரவிந்தன்,

(உங்களை அரவிந்தன் என்று அழைப்பதா? அல்லது, சொக்கன் என்றா?)

கமலின் அந்தத் தீசல் பேட்டியை நானும் படித்தேன். சமீப சில நாட்களாகவே கவனித்து வருகிறேன். ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்தாலும் கிடைத்தது; நம்முடைய ஆட்கள் ஆஸ்கர் பரிசையே திட்ட ஆரம்பித்து விட்டார்கள். பொறாமை, பொச்சரிப்பு என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறேன். அதை ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்த போது தமிழ் சினிமாக்காரர்கள் எதிர்கொண்ட விதத்தில்தான் நேரடியாகப் பார்க்க முடிந்தது. ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்தது பற்றி உலகமே கொண்டாடிக் கொண்டிருந்தபோது தமிழ் சினிமாக்காரர்கள் மட்டும் எதையெதையோ வாயில் வந்ததைப் பேசிக் கொண்டிருந்தார்கள். இளையராஜாவிடமிருந்து ஒரு சொல் கிடையாது. கமலோ வெளிப்படையாகவே தன்னுடைய எரிச்சலைப் பதிவு செய்தார். இதோ அந்த எரிச்சல்:

“அமெரிக்காவின் ஆஸ்கர் விருது இந்தியாவுக்குக் கிடைத்திருப்பது பெருமை. உலகத்தின் உச்ச விருது என்று இதைக் கூறி விட முடியாது. இது அமெரிக்காவின் உச்சம். அதில் ரஹ்மான் பங்கெடுத்து விருது வென்றிருக்கிறார். சத்யஜித் ரேவுக்கு விருது கொடுத்தது பெருமை. ரஹ்மானின் சாதனையும் அதற்குக் கம்மி இல்லை. இந்த விருதை வைத்துக் கொண்டு (அவர்) அடுத்த பிரயாணத்திற்குத் தயாராக வேண்டும். இவருக்குக் கிடைத்து விட்டதே என்று கோபப்பட்டோ, சந்தோஷம் அடைந்தோ அல்லது பொறாமைப் பட்டோ நாமும் அதுபோல் விருது பெறுவதற்கு முன்னேற வேண்டும்.” (ஃபெப்ருவரி 2009, தினகரன்)

கமலின் வாசகங்களை இலக்கியத்தில் பொருத்திப் பார்ப்போம். மனுஷ்ய புத்திரனுக்கு நோபல் பரிசு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். (அவர் அந்தப் பரிசுக்கு நிச்சயம் தகுதி உடையவர்தான்; இன்ஷா அல்லாஹ்). உடனே ஒரு சக தமிழ்க் கவிஞன் என்ன சொல்வான் தெரியுமா?

”இந்த ஸ்வீடிஷ் பரிசு மனுஷ்ய புத்திரனுக்குக் கிடைத்திருப்பது பெருமை. ஆனால் இதை உலகத்தின் உச்சபட்ச இலக்கிய விருது என்று சொல்லிவிட முடியாது. இது ஸ்வீடன் நாட்டின் உச்சம். அதில் மனுஷ்ய புத்திரன் பங்கு பெற்று வெற்றி அடைந்திருக்கிறார். (அங்கே என்ன ரேக்ளா ரேஸா நடத்தினார்கள்?) பொதுவாக ஸ்வீடிஷ்காரர்களுக்கு அவ்வளவாக இலக்கியம் தெரியாது என்று ஸ்டாக்ஹோமில் பணிபுரியும் என் சகலை அடிக்கடி சொல்லுவார். இல்லாவிட்டால் நம் பாரதிக்குக் கொடுக்காமல் அந்தத் தாகூருக்குக் கொடுத்திருப்பார்களா? தாகூருக்குக் கொடுத்தது பெருமை. ஆனால் இப்போது மனுஷ்ய புத்திரனுக்குக் கொடுத்திருப்பது சிறுமை என்று சொல்ல மாட்டேன். இந்த விருதை வைத்துக் கொண்டு அவர் அடுத்த பிரயாணத்துக்குத் தயாராக வேண்டும். (எங்கே சந்திர மண்டலத்துக்கா?)

மனுஷ்ய புத்திரனுக்கு இந்த விருது கிடைத்து விட்டதே என்று கோபப்பட்டோ பொறாமைப்பட்டோ ஸ்ரீபுரம் என்ற பெயரில் ஒரு பத்தாயிரம் பக்க நாவலை எழுதி என் சகா ஜெயன் அடுத்த ஆண்டே ஒரு கலைமாமணி விருதை வாங்குவான்; எங்களுக்கு ஸ்வீடிஷ் ஸ்டாண்டர்ட் தேவையில்லை; தமிழ்நாட்டு ஸ்டாண்டர்டே போதும். இதை நிசர்கதத்த மஹராஜ் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். மேலும், இப்போதெல்லாம் மேற்கத்திய நாடுகள் முஸ்லீம்களைக் கவர்வதற்காக இலக்கியத்துக்குப் புறம்பான என்னென்னவோ காரியங்களைச் செய்வதாக என் ஸ்டாக்ஹோம் சகலை சென்ற மாதம் சிட்லபாக்கம் வந்திருந்தபோது குறிப்பிட்டார். ஒருவேளை மனுஷ்ய புத்திரனின் கவிதைகளைப் படிக்காமலேயே அவருடைய இயற்பெயரை (அப்துல் ஹமீது) மட்டும் பார்த்து விட்டு இந்தப் பரிசைக் கொடுத்து விட்டார்களோ என்னவோ? எப்படியிருந்தாலும் அப்துல் ஹமீது – ஸாரி, மனுஷ்ய புத்திரன் - அடுத்த பஸ்ஸுக்கு – ஸாரி, அடுத்த பிரயாணத்துக்குத் தயாராக வேண்டும்.”

பகடி இல்லை; நிஜமாகவே இப்படி நடக்கலாம். கமலின் வார்த்தைகளில் அந்த அளவு குரோதத்தைப் பார்க்கிறேன். சமீபத்தில் வந்த அவருடைய டைம்ஸ் ஆஃப் இந்தியா பேட்டியை அவரது தினகரன் பேட்டியோடு சேர்த்து வாசித்தால் இன்னும் சில விஷயங்களையும் புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்க அளவுகோல் – இந்திய அளவுகோல் என்றெல்லாம் கலை இலக்கியத்தில் எதுவும் இல்லை. உலகம் முழுவதும் ஒரே அளவுகோல்தான். கம்பனுக்கு எந்த அளவுகோலோ அதே அளவுகோல்தான் ஷேக்ஸ்பியருக்கும். இந்த எளிய விஷயம் கமலுக்குத் தெரியாது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. க்ரிக்கெட் ஆட்டத்துக்கு எப்படி ஒவ்வொரு தேசத்துக்கும் ஒவ்வொரு தர நிர்ணயம் இல்லையோ அதைப் போலவேதான் கலை இலக்கியத்துக்கும்.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். பிச்சாவரத்திலிருந்து நானும் சீனிவாசனும் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம். அவருக்கு வீடு கூடுவாஞ்சேரி அருகே. எனவே நானும் கூடுவாஞ்சேரியிலிருந்து பஸ் பிடித்து சான் தோமே வந்து விடலாம் என்று ஏற்பாடு.

“ஐயோ பஸ்ஸா; நான் ஆட்டோவிலேயே போய் விடுகிறேனே?”

ஏனென்றால் நானும் அவரும் பெங்களூரிலிருந்து வரும்போது இப்படித்தான் கூடுவாஞ்சேரியிலிருந்து புறநகர் ரயிலில் ஏறி கூட்டத்தில் நசுங்கி ஆஸ்பத்திரியில் சேர்ந்தது ஞாபகம் வந்தது.

உடனே சீனிவாசன் “இந்த முறை அப்படியெல்லாம் இல்லை; இது ஏ.சி. வசதி செய்யப் பட்ட சொகுசு பஸ்; டிக்கட்டே 40 ரூபாயோ என்னவோ, யாரும் ஏற மாட்டார்கள்” என்றார்.

அவர் சொன்னது போல் பஸ்ஸிலும் கூட்டம் இல்லை. ஆனால் அதில் எழுதியிருந்த வாசகம் என்னை மிகவும் துன்புறுத்தி விட்டது. ”நான் என்றால் உதடுகள் ஒட்டாது; நாம் என்றால் ஒட்டும்.” இந்தப் பொன்மொழியை உதிர்த்தவர் தமிழக முதல்வர் கருணாநிதி. அதாவது, ஒருமைப்பாட்டுக்கான பொன்மொழியாம். அப்படியானால் இவர் ’நாம்’ என்று நினைத்திருந்தால் அ.தி.மு.க., ம.தி.மு.க என்ற இரண்டு கட்சிகளுமே தோன்றியிருக்காதே? எம்ஜியாரையும், வைகோவையும் நாம் என்று நினைக்காமல் தன் குடும்பத்தினரை மட்டுமே நாம் என்று சுயநலமாக நினைத்ததால்தானே அந்த இரண்டு பேரும் தி.மு.க.வை விட்டுப் பிரிந்து சென்று தனிக் கட்சி ஆரம்பித்தார்கள்? இல்லாமல் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் உள்ள கொள்கை வேறுபாடு மாதிரி இவர்களுக்குள் இருந்ததா என்ன?

சரி, அந்த சொகுசு பஸ்ஸுக்கு வருவோம். அதில் கருணாநிதியின் பொன்மொழி மட்டும் எழுதியிருந்தால் அவ்வளவு வருத்தப்பட்டிருக்க மாட்டேன். அதற்குப் பக்கத்தில் ஒரு திருக்குறளும் இருந்தது. ஆக, கருணாநிதியும் திருவள்ளுவரும் ஒன்று!

அப்போது எனக்கு வேறோர் சம்பவம் ஞாபகம் வந்தது. ஃப்ரான்ஸின் தென்கோடியில் உள்ள துலூஸ் என்ற சிறு நகரில் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன். அந்த பஸ்ஸில் திருக்குறளை ஃப்ரெஞ்சில் மொழிபெயர்த்து எழுதியிருந்தார்கள். பக்கத்தில் வால்டேரின் வாசகம். இப்படி துலூஸில் மட்டும் அல்ல; ஃப்ரான்ஸ் முழுவதுமே பஸ்களில் இருந்தார் நம் திருவள்ளுவர். காரணம், திருவள்ளுவர் உலகத் தரம். கருணாநிதி தமிழ்த் தரம்.

மேலும், கமல் சொல்வது போல் அவர் இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றவரும் அல்ல. இந்திய அரசு கொடுக்கும் பத்ம ஸ்ரீ விருது எல்லாம் சிரிப்பு நடிகர்கள் விவேக்குக்கும் கஞ்சா கருப்புக்கும் கிடைக்கும். (அல்லது, கிடைத்து விட்டதா?) அது பற்றிப் பெருமைப்பட எதுவும் இல்லை. இந்தி சினிமா உலகில் இதுவரை நுழைந்து வெற்றி பெற்ற தமிழ் சினிமா பிரமுகர் யார்?

சிவாஜி கணேசனை நடிகர் திலகம் என்றார்கள். அவரைப் போன்ற நடிகர் உலகத்திலேயே இல்லை என்றார்கள். சொன்னதெல்லாம் தமிழ்ர்கள். ஆனால் இந்தி சினிமாவில் அவர் பெயரே தெரியாது. பாலச்சந்தரை இயக்குனர் சிகரம் என்றார்கள். அவர் பெயரும் இந்தி சினிமாவில் தெரியாது. இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து இந்திக்குச் சென்றவர்கள் இரண்டே பேர்தான். ஒருவர், மணி ரத்னம். இரண்டாமவர், ஏ.ஆர். ரஹ்மான். இவர்களில் ரஹ்மான் இந்தி எல்லையைத் தாண்டி உலக அளவில் சென்று விட்டவர். இந்த இருவரைத் தவிர வேறு யாரையுமே இந்தி சினிமா ஏற்கவில்லை. (முருகதாஸைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்). கமல்ஹாசன் இந்தி சினிமாவில் கால் பதிக்க (தடம் பதிக்க அல்ல) எவ்வளவோ முயற்சி செய்தார். ஏக் தூஜே கேலியே என்ற படத்தில் நடித்தார். கேலி செய்து அனுப்பி விட்டார்கள். காரணம், அவர் தமிழ்த் தரத்தை வைத்துக் கொண்டு இந்திக்குச் சென்றார். ஆனால் இந்தியோ இன்று உலகத் தரத்துக்கு சவால் விடக் கூடிய நிலைக்குச் சென்று விட்டது.

(இப்போது கூட இந்தியில் வெளிவந்த A Wednesday என்ற அருமையான படத்தைத் தமிழில் எடுக்கிறார் கமல். நஸ்ருத்தீன் ஷா ஒரு சராசரி மனிதனாக நடித்த படம் அது. ஒரு எளிமையான – மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த – புற நகர் ரயிலில் பயணம் செய்யும் ஒரு குமாஸ்தாவாக நடிக்க கமலின் ஆஜானுபாகுவான தோற்றம் இடம் கொடுக்குமா? அதுவும் தவிர, படத்தின் தலைப்பு ‘ஒரு தலைவன் இருக்கின்றான்’. ’ஒரு புதன்கிழமை’ படத்தின் செய்தியே ’ஒரு நல்ல தலைவன் இல்லாமல் ஊழலில் புரளும் அரசியல்வாதிகளால் இந்தியா சீர்கெட்டுப் போய் விட்டது’ என்பதுதான்.)

நிலைமை இப்படியிருக்க, இவர் எதை இந்தியத் தரம் என்றும், அமெரிக்கத் தரம் என்றும் கூறுகிறார்?

எங்கிருந்தோ வந்த அனுராக் காஷ்யப் என்ற மனிதரை இன்று ’தேவ்.டி’ என்ற ஒரே படத்தின் மூலம் உலகமே திரும்பிப் பார்க்கிறதே; அது எப்படி நிகழ்ந்தது? உலக சினிமாவைக் கரைத்துக் குடித்திருக்கும் கமலுக்கு அது தெரியாதா?

காஷ்யப்பின் பேட்டி ஒன்றை இன்று படித்தேன். தேவ்.டியின் பிரதான பாத்திரங்களில் ஒருவரான கல்கி காஷ்யப்பின் காதலி. அவருக்காகவே காஷ்யப் Happy Ending என்ற படத்தை எடுக்கப் போவதாகக் கூறியிருக்கிறார். விஷயம் அது அல்ல. இந்தப் படம் ரொமானிய இயக்குனரான Cristian Mungiu-வின் 4 Months 3 Weeks 2 Days-இன் பாணியை (Genre) ஒத்திருக்கும் என்கிறார். காஷ்யப் குறிப்பிடும் இந்தப் படம் 2007-இல் கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட மிகச் சிறந்த படத்துக்கான விருதைப் (Palme d’Or) பெற்ற படம்.

ஒத்திலியா, கப்ரியாலா என்ற இரண்டு தோழிகள். கப்ரியாலா கருத் தரித்து விடுகிறாள். அப்போது கம்யூனிஸ்ட் ரொமானியாவில் கருக் கலைப்பு தடை செய்யப் பட்டிருக்கிறது. அந்த நிலையில் தன்னுடைய தோழிக்கு கருக் கலைப்பு செய்ய உதவி செய்கிறாள் ஒத்திலியா. டாக்டர் வந்து பரிசோதித்த பிறகு ‘மூன்று மாதக் கருதான்’ என்று கப்ரியாலா சொன்னது பொய் என்று தெரிகிறது. ”கரு இப்போது கிட்டத்தட்ட ஐந்தாவது மாதத்தில் இருக்கிறது” என்கிறார் டாக்டர். (சரியாகக் கணக்கிட்டால் நான்கு மாதம், மூன்று வாரம், இரண்டு நாள்). விஷயம் வெளியே தெரிந்தால் டாக்டருக்கு 10 ஆண்டுகள் ஜெயில். ”கரு இவ்வளவு முதிர்ந்த நிலையில் என்னால் அபார்ஷன் செய்ய முடியாது” என்று மறுக்கும் டாக்டரோடு படுத்து அவரைத் தன் தோழிக்குக் கருக் கலைப்பு செய்ய இணங்க வைக்கிறாள் ஒத்திலியா. (ஒத்திலியாவுக்கும் ஒரு காதலன் இருக்கிறான்). கடைசியில் கருக் கலைப்பு முடிந்து வெளியே வந்து விழும் அந்தக் கருவை எப்படி யாருக்கும் தெரியாமல் டிஸ்போஸ் செய்வது என்ற பிரச்சினை எழுகிறது. இப்படிப் போகிறது க்றிஸ்டியன் முங்கியூவின் படம்.

இதே போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் தினம்தினம் ஆயிரம் நடக்கின்றன. இங்கே கருக் கலைப்பு தடை செய்யப்பட்ட விஷயம் அல்ல என்றாலும் சமூகத் தடை உட்பட இதில் ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. சமூக எதார்த்தம் இப்படி இருக்க, இங்குள்ள உலக நாயகர்கள் எடுப்பது தசாவதாரம்! எப்படித் தமிழ் சினிமாவை உலக அரங்கில் மதிப்பார்கள்?

நன்றி -சாரு ஆன் லைன்

வெள்ளி, 6 மார்ச், 2009

முக்கிய செய்தி -இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா உண்ணாவிரதம்

இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெறும் என்றும், சென்னையில் தனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை ராணு வத்தின் கொடூரத் தாக்குதல் காரணமாக இலங்கையில் வாழும் நமது உடன் பிறப்புகளாகிய தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும், உண்ண உணவு இன்றியும், உரிய மருத்துவ சிகிச்சை இன்றியும், பல்வேறு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், இன்னல்களுக்கும் ஆட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதைத் தடுத்து நிறுத்துவதற்குரிய ஒரே வழி இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.

தமிழினத் தலைவர் என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசின் முதல்வர் கருணாநிதியும், அவர் தாங்கி நிற்கும் மத்திய அரசும் இனப் படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்தும், இலங்கையல் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும் வரும் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்துக்கு நான் தலைமையேற்கிறேன் என்று கூறியுள்ளார்.

நன்றி-நக்கீரன்

வியாழன், 5 மார்ச், 2009

போராடு கேப்டன் போராடு -தீக்குளித்த விஜயகாந்த் தொண்டனின் கடைசி வேண்டுகோள்

விஜயகாந்த் போராட்ட குணம்,அவருடைய தமிழ் பற்று எப்படி பட்டது என்று அவருடைய கட்சி தொண்டர் தீக்குளித்து உயிரை விடுவதற்கு முன்பு ,வெளியிட்ட வேண்டுகோள் மூலம் வெட்ட வெளிச்சமாகி விட்டது /
தினசரி ஏராளமான தமிழர்கள் இலங்கையில் உயிரை இழக்கும் சூழ்நிலையில் காங்கிரஸ் கூட்டணிக்காக ,எலும்பு துண்டுக்கு ஏங்குவது போல காத்து கொண்டிருக்கும் கேப்டன்,புரட்சி கலைஞர் ...தானும் ஒரு சாமானிய அரசியல் வாதி என்பதை நிருபித்து விட்டார் ...
நக்கிரன் இதழில் இன்று வெளியான தே.மு.க.தொண்டரின் வேண்டுகோள் படியுங்கள் .....

திங்கள், 23 பிப்ரவரி, 2009

தமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்!




மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,

Karunanidhi வணக்கம்.

"இலங்கைப் பிரச்னைக்காக இங்குள்ள தமிழர் ஒன்றாதல் வேண்டும் என்று சொன்ன உங்களைப் பாராட்டுகிறேன். எல்லோரையும் ஒன்றாகச் சொல்லிவிட்டு நீங்களே பிரிந்தது ஏன்?

இன்னும் உங்களுக்கு ஒரு ஓரத்தில் மனசாட்சி என்று ஒன்று சிறிதளவேணும் இருந்தால் நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள்.

ஏற்கனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்றைத் துவங்கியிருக்கிறார்கள். அதை ஏன் துவங்கினார்கள்? ஈழத் தமிழர்க்காக உங்கள் தலைமையில் போராடுகிறோம், வாருங்கள் என்று வருந்தி வருந்தி அழைத்தார்கள். உடனே என்னை முன்னிறுத்திப் போராடச் சொல்லி என் ஆட்சியைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள் என்றீர்கள். சரி இவரை நம்பினால் ஈழத் தமிழனுக்கு விமோசனம் கிடைக்காது என்று நம்பித்தான் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்றைத் துவக்கினார்கள்.

அதிலும் குறிப்பாக ஏன் அப்படித் துவக்கினார்கள். இதில் பல்வேறு கட்சிகள் இருந்தாலும் தமிழர் என்ற ஒரு குடையின் கீழ் திரள வேண்டும் என்பதுதான் அதன் முதன்மையான நோக்கம். அப்படியே துவக்கினாலும் போராட்டத்துக்கு உங்களை விட்டுவிடாமல் உங்களுக்கும் முறையான அழைப்பை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் அனுப்பினார்கள். ஆனால் நீங்களோ என்னை அழைக்கவில்லை என்று முழுப்பொய் சொன்னீர்கள். பழ.நெடுமாறன் உங்களுக்கு அனுப்பிய அழைப்பைச் செய்தியாளர்கள் முன்னிலையில் வாசித்துக்காட்டி உங்கள் பொய்யை வெளிச்சம் போட்டுக்காட்டினார்!

உடனே மருத்துவமனையிலிருந்த உங்களுக்கு இலங்கை தமிழர் நல உரிமைப் பாதுகாப்புப் பேரவை என்ற ஒன்றைத் துவக்கியதாக அறிவித்தீர்கள். இதன் மூலம் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் வேண்டும் என்ற உங்கள் வாய்மொழியையே பொய்மொழியாக்கிவிட்டீர்கள். அழைத்தவர்களை விட்டுவிட்டு அதிமுகவுக்கு அழைப்பு விடுகிறீர்கள். என்ன அய்யா, இது நியாயம்? இதுவெல்லாம் உங்களின் கைவந்த கலை என்பது எனக்கு நன்கு தெரியும்.

மருத்துவமனையிலிருந்துகொண்டே குடும்ப நலனை மட்டுமே முன்னிறுத்தி ஆட்சியாளர்களுக்கு உத்திரவு பிறப்பிக்கும் உங்களின் குடும்பப் பாசத்திற்கு ஒரு எடுத்துக்காட்டுதான், "அரசு கேபிள் நிறுவன" அதிகாரியான உமாசங்கரை பந்தாடும் உத்திரவு! பிழைக்கத் தெரியாத ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் ஜெயலலிதா ஆட்சியில் சுடுகாட்டுக் கூரை ஊழலை வெளிக்கொணர்ந்தார்!

உங்களாட்சியில் சுமங்கலி வட இணைப்பு நிறுவனத்தின் கருங்காலித்தனத்தை வெளிக்கொணர்ந்தார்! ஆட்டைக் கடிச்சு மாட்டைக்கடிச்சு என் குடும்பத்தையே கடிக்க வந்தாயா? என்று ஒரு நேர்மையான முதுகெலும்புள்ள ஒரு அதிகாரியை தூக்கி வீசி எறிந்திருக்கிறீர்கள். இதையெல்லாம் மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள், முதல்வர் அவர்களே! இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை! ஈழத் தமிழரென்றாலும், அரசுக்கட்டிலானாலும் ஆஸ்பத்திரிக்கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாலும் உங்கள் சிந்தனை உங்கள் குடும்பத்தைச் சுற்றியே என்பது எனக்குத் தெரியாதா? தமிழகத்து மூலை முடுக்கெல்லாம் இருக்கும் மக்களுக்குத்தான் தெரியாதா?

இலங்கை தமிழர் நல உரிமைப் பாதுகாப்புப் பேரவை அமைத்துள்ள உங்களுக்கு இன்னொன்றைச் சுட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஈழத் தமிழர்களுக்கு உங்களால் விடிவு ஏற்படப்போவதில்லை என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஏனென்றால் அன்பழகனார் இலங்கைப் பிரச்னையில் எங்களால் எதுவும் செய்ய இயலாது; தில்லியால் தான் இலங்கையைக் கட்டுப்படுத்த முடியும்; நாம் அவர்களுக்கு உணர்த்த மட்டும்தான் முடியும் என்று உங்கள் ஒட்டுமொத்த கையாலாகத் தனத்தை பேரவைக் கூட்டத்திலேயே சொல்லிவிட்ட பிறகு பேரவையின் இலட்சணத்தையும் அதன் நோக்கத்தையும் புரிந்து கொண்டேன்.

இலங்கைப் பிரச்னையில் நாடகமாடுவது யார்? என்று நீங்கள் ஜெயலலிதாவை நோக்கி விரல் நீட்டியிருக்கிறீர்கள்? உங்கள் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக்கொண்டு ஜெயலலிதாவின் முதுகைப் பாருங்கள்.

இலங்கைத் தமிழர்களின் இன்னுயிர்காக்க தங்கள் இன்னுயிரை ஈகிவருவோர் மொழிப்போராட்டத்தை விட வலுவாக தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்துவருகிறது.
இந்திய அரசு திட்டவட்டமாக இப்போது கைவிரித்துவிட்டது? இனி என்ன செய்யப்போகிறீர்கள்?

இலங்கையரசு போரை நிறுத்தும் பேச்சே இல்லை என்று கொக்கரிக்கிறது

இன்னும் காங்கிரசை நம்பி நாடகமாடமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு உங்களைத் தள்ளிவிட்டுவிட்டது.

காலம்தாழ்ந்தாலும், நீங்கள் இந்த நெருக்கடியான நேரத்திலாவது ஒரு நல்ல முடிவை எடுப்பதற்கு இது மிகச் சரியான நேரம், முதல்வர் அவர்களே!

சரி விஷயத்துக்கு வருகிறேன். ஈழத் தமிழர்கள் என்றால்தான் தில்லியைக் கைகாட்டுகிறீர்கள்; ஈழத்திலிருந்து உங்களையே நம்பி வந்த இலங்கைத் தமிழர்களை அகதிகள் முகாமில் நீங்கள் எப்படி வைத்திருக்கிறீர்கள்?

தமிழகத்தை நம்பி வந்த ஈழத் தமிழர்கள் தமிழகத்தில் நடத்தப்படும் நிலை மிகக்கொடுமையானதாக இருக்கிறது. அகதிகளாய் இங்குவந்து, ஏன் வந்தோம் என்ற ஆறாத் துயரில் ஆழ்ந்திருப்போர் குறித்து ஏன் தெரிந்து கொள்ள வில்லை?

தமிழக அரசும் சரி, மத்திய அரசும் சரி ஈழத் தமிழர்களை மனித நேயத்தோடு அணுக மறுக்கிறது? ஏன்? குற்றுயிரும் குலையுயிருமாய் இங்கு வந்து, அந்தக் குண்டுகளுக்கே இரையாகியிருக்கலாமோ என்று எண்ணுகிற சூழலை உங்கள் அரசும், மத்திய அரசும் ஏற்படுத்தியுள்ளது வேதனை தரும் ஒன்று; நெஞ்சுள்ளோர் பதறிப்போவார். ஈழத் தமிழருக்கு இராசபக்சே எமன் என்றால் இங்கிருப்போருக்கு நீங்கள் சார்ந்த அரசும்,நடுவணரசும் கொடுந்தீங்கிழைக்கிறது.

இந்திய அரசு அகதிகளைக்கூட ஒரே மாதிரி நடத்த முன்வராமல் ஈழ அகதிக்கு ஒரு நீதியும், திபெத்திய அகதிக்கு ஒரு நீதியும் செய்யும் கொடுமையும் நீங்கள் அறிந்தே நடக்கிறதா? தெரிந்தும் தெரியாததுபோல இதிலும் நடுவணரசுக்கு துணைபோகிறீர்களா?

திபெத்திய அகதி முகாம் எப்படி இயங்குகிறது? ஈழத் தமிழர் அகதிகள் முகாம் எப்படி இயங்குகிறது? அவர்களுக்கு என்னவெல்லாம் இந்திய அரசு சலுகைகளைச் செய்கிறது? திபெத்திய முகாம் உள்ள கர்நாடகாவில் கர்நாடக அரசு செய்யும் உதவிகள் என்ன? ஈழத் தமிழர் முகாம்கள் உள்ள தமிழகத்தில் தமிழக அரசு செய்யும் உதவிகள் என்ன? இத்தனைக்கும் கர்நாடகத்திற்கும் திபெத்தியருக்கும் எந்த ஒட்டுறவும் கூட்டுறவும் கிடையாது. ஆனால் தமிழகத்தில் இரத்த சம்பந்தம் உள்ளவர்கள், தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற பந்தம் உள்ளவர்கள் ஈழத் தமிழருக்காக ஈழத் தமிழர் நல உரிமைப்பேரவை வடிப்பது கண்ணீரா? நீலிக்கண்ணீரா? என்பதை இந்த மடலின் முடிவில் தெரிந்துகொள்வீர்கள்!

இந்தியாவில் திபெத்திய அகதிகள் மற்றும் ஈழத்தமிழ் அகதிகள் பலர் வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்கு இந்திய அரசு செய்யும் உதவி(?)களை இங்கு பட்டியலிடுகிறேன். ஒட்டும் உறவும் இல்லாத கர்நாடக அரசு செய்து தந்திருக்கும் ஏற்பாடுகளையும் ஓய்வாக மருத்துவமனையின் மலர்படுக்கையிலிருந்தவாறே வசதியாகச் சாய்ந்து கொண்டு படித்துப்பாருங்கள்.
கர்நாடகாவிலுள்ள திபெத்திய அகதிகள் முகாமில் 5,232 அகதிகள் உள்ளனர்.

தாங்கள் விரும்பியது போல் வீடுகளைக் கட்டிக் கொள்ளுவதற்கு அனுமதி (அனைத்தும் மாடி வீடுகள் மற்றும் அவர்களின் கலாச்சாரப்படி கட்டப்பட்ட ஓட்டு வீடுகள்). தனியாக ஒவ்வொரு பகுதிக்கும் திபெத்தியர்களுக்கு 5 மருத்துவர்கள், 15 செவிலியர்களுடன் தரமான, நவீன வசதிகளுடன் தனி மருத்துவமனை; அவர்கள் தாங்களே வடிவமைத்துக் கொண்ட கழிப்பறை, குளியலறைகள்.

ஆனால் திபெத்திய அகதிகளுக்கோ தங்கள் புத்தமத கலாச்சாரத்தின்படி தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளவும், உடைகள் அணியவும், வீடுகளைக் கட்டிக் கொள்ளவும், தங்கள் மொழியை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கின்றது. தனியாக நவீனமுறையில் வடிவமைக்கப்பட்ட புத்த கோயில் மற்றும் தலாய்லாமா கோயில்கள் 1 ஏக்கர் பரப்பளவில் கட்டித்தரப்பட்டுள்ளது.

தனியாக சுமார் ஐம்பது மாணவர் படிக்கக்கூடிய மதப்பள்ளி ஒன்றும்,அதே போல் மதக் கல்லூரி ஒன்றும்,தனித்தனியான மாணவர் விடுதிகள் உள்பட ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

சகல வசதிகளுடன் CBSC பாடத் திட்டத்தில் - தில்லி அரசாங்கத்தின் அனுமதி பெற்ற. திபெத்திய அகதிக் குழந்தைகளுக்கு மட்டுமான பள்ளி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இது பத்தாம் வகுப்பு வரை மட்டும்.

பின் 11, 12 வகுப்பு பயில அரசே அனைத்து செலவுகளையும் ஏற்று சிம்லா அனுப்பி வைக்கிறது. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் படிக்க அரசு செலவுடன் முறையே 3, 5 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. திபெத்தியர்கள் தங்கள் உயர்கல்வியை தொடர அகதிகள் என்ற முத்திரையுடன், கர்நாடகத்தில் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம்.
மொத்தமாக இருக்கக்கூடிய மக்கள் தொகையில் 5232 பேர்களுக்கு பண்படுத்தப்பட்ட, நீர் வசதியுடன் விவசாயம் செய்யத்தக்க 3,500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியாக இணையவசதி இலவசமாக வழங்கப் படுகிறது. 22 பகுதிகளுக்கும் தனித்தனியாக செல்போன் டவர்கள் உள்ள தொலைபேசி வசதிகள். நான்கு வகையான வங்கிகள் சிண்டிகேட் வங்கி,ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்,கூட்டுறவு வங்கி,வெளிநாட்டு பணம் பெற்றுக் கொள்ள Western Union Money Transfer வசதிகள், தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள்;
சுயமாக பால்பண்ணை வைக்க, பொருட்கள் உற்பத்தி பண்ணை, கடை வைத்துக் கொள்ள அரசே வட்டி மற்றும் நிபந்தனை இல்லாமல் கடன் வழங்குகிறது.

அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை வெளியில் சென்று விற்கவும், கடையில் சென்று விற்கவும் அனுமதிக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக (பணிமனை) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பண உதவி மற்றும் பொருளுதவி குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் வழங்கப்படுகிறது.

திபெத்திய அகதிகளுக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்காக அமைக்கப்பட்ட அதிகாரி மாதமொருமுறை மைய அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார். மற்றபடி முழு சுதந்திரமாக உள்ளனர்.

திபெத்திய அகதிகளுக்கு உள்ள மற்ற சிறப்பியல்புகள்

இளைஞர்களுக்கு தனியாக அமைக்கப்பட்ட Youth Congress
மக்கள் ஒன்றாக கூடுவதற்கு Multipurpose Hall.
அவர்கள் நாட்டில் இருந்து வருபவர்களை தங்கவைக்க அரசு ஓய்வு விடுதி
அவர்கள் விரும்பும் இடத்தில் மதவழிபாட்டுத் தலங்கள்.
வெளியில் சென்று தொழில் தொடங்க வசதி.
கர்நாடக மக்களுடன் இயல்பாக கலந்து கொள்ள அனுமதி. (ஆனால் ஈழ அகதிகள் அனுமதிக்கப்படுவதில்லை) ஆகியவை ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
திபெத்திய அகதிகள்முகாம் படங்களை உங்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன். இதை படித்துவிட்டு படங்களைப் பார்த்துவிட்டு ஈழத்தமிழர்கள் அகதிகளாய் உங்கள் தலைமையில் இயங்கும் அரசு எப்படி வைத்திருக்கிறது என்று நீங்கள் பார்த்துப் புளகாங்கிதம் அடையப் போகிறீர்களா? வெட்கித் தலைகுனியப்போகிறீர்களா?

103 முகாம்களில் ஏழத்தாழ 75,000க்கும் மேல் ஈழத் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். தினமும் தங்கள் உடைமைகளை இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு நூற்றுக்கணக்கான பேர் வந்து கொண்டும் இருக்கின்றனர். அரசாங்கங்கள் கட்டிக் கொடுக்கும் குடிசைகள் மற்றும் ஈழ அகதிகள் தாங்களாக கட்டிக் கொள்ளும் குடிசைகள். 90% வீடுகளில் மின்சாரமே இல்லை. பெரும்பாலும் மேற்கூரை சரியாக இல்லாத வீடுகள் அதிகமாக உள்ளன.

அருகில் உள்ள பொது மருத்துவமனைகளில் உடல் நலம் பாதிக்கப்படும் பொழுது, முகாம் பாதுகாவலர் அனுமதி பெற்றுப் போய் பார்த்துக் கொள்ளலாம்.

பாதி முகாம்களில் கழிப்பிட வசதி இல்லை. ஒரு சில முகாம்களில் இடிந்து போய் பராமரிப்பு அற்று நாய்களும், பன்றிகளும் (மனிதன் போக தகுதியற்ற) மலம் கழிக்கக்கூடிய கழிப்பறை, எதற்கும் மேற்கூரை கிடையாது. திறந்த வெளி கழிப்பிடம். பெண்கள் குளிப்பதற்கு நான்கு பக்கமும் ஓலைகளால் வேயப்பட்ட வானமே கூரையாய் குளியலறை.

அனைத்து உரிமைகளும் ஈழத்தமிழர்களுக்கு மறுக்கப்படுகிறது. பொதுவாக ஈழத்தில் உள்ள பெண்கள் குட்டைப் பாவாடை அணிவது வழக்கம்தானே. அதனை இங்குள்ள காவல் துறையினர் மற்றும் ஊழியர்கள் நீங்கள் ஆபாசத்தை தூண்டுகின்றீர்கள் என்ற பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்கின்ற அவலங்களும் அரங்கேறுவது சாதாரணமானது.

மனித உரிமையே இல்லாத இடத்தில் மத சுதந்திரம் எதிர்பார்ப்பது அவர்கள் அறியாமை இல்லையா, முதல்வர் அவர்களே!?

அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஈழக் குழந்தைகள் 1 முதல் +2 வகுப்பு வரை சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். (ஆனால் மண்டபம் பள்ளியில் நேரடியாக +1 மற்றும் +2 வகுப்புகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவது இல்லை. அதற்கு பள்ளி நிர்வாகம் சொல்லும் காரணம் என்னவெனில் +2 வகுப்பு தேர்வு முடிவுகள் பாதிக்கப்படும் என அச்சம் கொள்வதாகச் சொல்கிறது. (மண்டபம் பள்ளியின் தற்போதைய நிலை என்னவெனில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 129 மேல்நிலைப் பள்ளிகளில் தர நிலையில் 128வது இடத்தில் உள்ள பெருமையான விதயத்தையும் தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

ஒருசில ஈழ முகாம்களில் 1 முதல் 5 வரையான வகுப்புகள் உள்ள பள்ளிகள் உள்ளன. அங்கு ஆசிரியர்களாக அகதிகளால் நியமிக்கப்பட்ட அகதிகள் முகாம்களில் உள்ள படித்த அதிகபட்சமாக இரண்டு ஆசிரியர்கள் உள்ளனர்.

பள்ளிக் கட்டிடம் பெரும்பாலும் பாழடைந்து ஓட்டை உடைசலாகத் தான் உள்ளது. உயர்கல்வியில் 2003 வரை இருந்த இட ஒதுக்கீடு நீக்கப்பட்டதால். உயர்கல்வி முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது வசதி உள்ளவர்கள் தனியார் கல்லூரிகளில் படிக்க அனுமதியை தாராளமாக வழங்கியிருக்கிறீர்கள். நம் நாட்டின் தனியார் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் எவ்வளவு என்று உங்களுக்கே தெரியும் முதல்வர் அவர்களே! ஈழத் தமிழர்கள் உயர் படிப்பு படித்து என்ன செய்யப்போகிறார்கள்? என்கிறீர்களா முதல்வர் அவர்களே!

குடியிருக்கவே ஏனோதானோவென்று இடம் கொடுத்த உங்கள் ஆட்சியில் கர்நாடக மாநிலம்போல விவசாய நிலம் கேட்பது சரியில்லை, இல்லீங்களா முதல்வர் அவர்களே!?

நாட்டுப் பிரச்சனைகள் பேசினாலே தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் சூழ்நிலையில் மற்ற முகாம்களில் இருக்கும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள STD Booth-களையும், 1 ரூபாய் நாணயப் பெட்டியையும் பயன்படுத்துகின்றனர். அனால் அதையும்கூட முகாம் காப்பாளரின் அனுமதி வேண்டும், என்ற அதிபயங்கர நிபந்தனையல்லவா விதித்திருக்கிறீர்கள், முதல்வர் அவர்களே!

மண்டபம் முகாமில் மூன்று நாள் மட்டும் வெளியே சென்று கூலி வேலை பார்க்க அனுமதி அளித்திருக்கிறீர்கள் முதல்வர் அவர்களே, இதற்கே உங்களுக்க் நன்றி சொல்ல வேண்டும், முதல்வர் அவர்களே.

ஏனென்றால் மற்ற முகாம்களில் அருகிலுள்ள ஊர்களில் சென்று வண்ணமடித்தல், கல்லுடைத்தல், விவசாயத்தில் கூலி வேலை செய்ய சாதாரணமாக அனுமதிப்பதில்லை.
கடுமையான நிபந்தனையுடன் வேலைதான் பார்க்கப்போறியா புலிகளுக்கு ஏதேனும் மறைமுக தொடர்பு வைத்துக்கொண்டு போகிறாயா? என்ற நடுவணரசுக்கு விசுவாசமான கேள்விகணைகளுக்கப்பால் அல்லவா அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

குடும்பத் தலைவருக்கு ரூ. 72, பெண்ணுக்கு ரூ.50 மற்ற உறுப்பினருக்கு ரூ.45 சிறு குழந்தைகளுக்கு ரூ.12.50. 15 நாளுக்கு ஒருமுறை வழங்கப்படுகின்றது. இந்தப் பணத்தை அகதிகள் வாங்குவதற்கும் உங்கள் அதிகாரிகள் கொடுப்பதற்கும், அடாடா அதுவும் மேன்மை தங்கிய தங்கள் ஆட்சியில் எனக்கே எழுதக் கூச்சமாக இருக்கிறது முதல்வர் அவர்களே!

மண்டபம் முகாம்களில் அறிவிக்கப்படாத தினம்தோறும் ஆய்வும் மற்ற முகாம்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஆய்வும் என்று நடைபெறுகிறது. இந்த ஆய்வுக் கொடுமை இருக்கிறதே முதல்வர் அவர்களே அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.

ஆய்வின் போது தங்கள் சொந்த மண்ணைப் பற்றிப் பேசினால் தீவிரவாதி என்ற முத்திரை குத்தப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற கொடுமை இருக்கிறதே, சிங்கள இராணுவமாய் உங்கள் அதிகார வர்க்கம் அதட்டி,அடக்கி நடத்தும் போக்கு இருக்கிறதே, சிங்களரெல்லாம் எம்மாத்திரம்?

தன் நாட்டை விட்டு இங்கு வரும் அகதிகளிடம் மூன்று நாட்கள் மண்டபம் முகாமில் உள்ள தனி சிறையில் அடைக்கப்பட்டு அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொள்கிறார்களா என்ற சந்தேகத்துடன் அவ்வாறு சோதனை செய்யும் போது சற்று வாட்டசாட்டமான இளைஞர்கள் கோபப்பட்டால் அவர்களை உடனேயே செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கின்றனர்.

செங்கல்பட்டு சிறப்பு முகாம் என்பது அறிவிக்கப்படாத ஒரு சித்திரவதைச் சிறைக்கூடம். நடுவணரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பையும், தங்கள் அரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து பார்ப்பதை எங்கு போய்ச் சொல்வது?

திபெத்திய அகதிகளைப் போல் ஈழத்தமிழர்களைப் பார்க்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அகதிகளாக வரும் ஈழத்தமிழர்களை மனிதர்களாகவாவது பாவித்து, வாழ்வுரிமையைப் பாதிக்காத அளவு வாழ்வதற்கான உத்தரவாதத்தினை தமிழினத் தலைவரான நீங்களே தராதபட்சத்தில் இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற
தங்கள் பம்மாத்து பாவ்லாக்கள் எல்லாம் யாரை ஏமாற்ற? யாரைத் திருப்திப்படுத்த முதல்வர் அவர்களே!

இந்தியாவை/ தமிழகத்தைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்கு அகதிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களை மற்ற நாடுகள் தன் நாட்டு குடிமகன் போல் மதித்து தனது அரசு பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளார்கள். ஆனால் உங்கள் அரசு ஈழத்தமிழர்களை மனிதர்களாகக்கூட நினைக்கமறுக்கிற சூழலை வைத்துக்கொண்டு இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்று பெத்தபேராக வைத்துக்கொண்டால் போதுமா? என்பதைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள் முதல்வர் அவர்களே!

அப்படிப்பட்ட இந்திய அரசுக்கு நீங்களும் துணைபோய்க்கொண்டு நடுவணரசோடு சேர்ந்துகொண்டு ஈழத்தில் உள்ள தமிழர்களுக்கும் இங்கு அகதிகளாய் வந்துள்ள தமிழர்கள் கண்களுக்கும் சுண்ணாம்பு தீட்டுகிறீர்களே, இது நியாயமா?

இராமதாசுக்கு பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு இரண்டு முறை ஆட்சியைப் பறிகொடுத்தேன் என்று தேய்ந்துபோன இசைத்தட்டாக திரும்பத் திரும்பச் சொல்வதை விடுங்கள்; அப்போதும் கூட "இதேவேளை இலங்கை தமிழர் பிரச்னைகளுக்காக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் தாக்கப்படுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் சொல்லி உங்களின் காங்கிரசு பக்தியை எடுதியம்பியிருக்கிறீர்கள். கடைசிகாலத்தில் அரசு அஹ்டிகாரிகளுக்கு துரோகம், ஈழத்தமிழர்களுக்குத் துரோகம், ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த நம் சகோதரத் தமிழர்களுக்கு துரோகம் என்று நீங்கள் பட்டியலை நீட்டிக்கொண்டே போவது உங்கள் பாவ மூட்டையின் சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதை மட்டும் மீண்டும்மீண்டும் நினைவு படுத்துகிறேன் முதல்வர் அவர்களே!

"சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இறங்கா ரடீ - கிளியே
செம்மை மறந்தா ரடீ...."

பாரதிகூட உங்களையே நினைத்து இதை பாடியிருப்பானோ என்று தோன்றுகிறது.

அடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை!

அசாதாரணத் தமிழன்,

- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா. (albertgi@gmail.com)
நன்றி -கீற்று .காம்

சனி, 21 பிப்ரவரி, 2009

முக்கிய செய்தி ;சுப்ரமணிய ஸ்வாமி க்கு கிடைத்த வெற்றி -வக்கீல்கள் கலக்கம்

தற்போதைய செய்தி;சுப்ரமணிச்வாமி மீது முட்டை தாக்குதல் வக்கீல்களால் நடத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே ..இதனால் பெரும் கழகமும் உண்டானதும் அனைவரும் அறிவோம்.ஆனால் இதற்க்கெல்லாம் புள்ளையார் சுழி ஒரு முட்டை தானே.



அந்த முட்டை உற்பத்தியையே நிறுத்திட்டாங்க.இது சுப்ரமணிய சுவாமிக்கு கிடைத்த வெற்றி தானே ..வக்கீல் களுக்கு கலக்கம் தானே .......
thatsTamil RSS feed thatsTamil  iGoogle gadgets Free SMS Alerts
Egg
நாமக்கல்: நாமக்கல்லை சுற்றியுள்ள கோழிப் பண்ணைகளில் முட்டை உற்பத்தி குறைந்துள்ள. இதனால் முட்டை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலே நாமக்கல் மாவட்டத்தில் 800-க்கும் அதிகமான கோழிப் பண்ணைகள் உள்ளது. இந்த கோழிப் பண்ணைகள் மூலம் தினசரி சுமார் 2.5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பருவ நிலை மாற்றம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாகவே வெப்பம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் முட்டை உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் முட்டைகள் உற்பத்தி குறைந்துள்ளதாக முட்டை உற்பத்தி சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனால் முட்டை விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வியாழன், 19 பிப்ரவரி, 2009

நாடாளுமன்ற தேர்தல் -யாருக்கு வெற்றி ?-குமுதம் சர்வே

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இவ்வேளையில் ,இலங்கை பிரச்சனை பற்றி எரியும் சூழ்நிலையில் ..யாருக்கு வெற்றி என குமுதம் தமிழகம் முழுவதும் ஒரு சர்வே எடுத்துள்ளது ...
அதன் முடிவுகள் உங்களுக்காக .....

சனி, 14 பிப்ரவரி, 2009

விகடன் ,குமுதம், லக்கி லுக் துரோகங்கள்

ஒரு படம் பலருக்கும் பலவிதமான சிந்தனைகளை தரும் என்பது பொதுவான விஷயம்.விமர்சனம் என்பதும் ,விமர்சனம் செய்தவரை குறை சொல்ல கூடாது தான் .ஆனால் இவர் சொன்னால் சரியாக இருக்கும் என யாரை நம்புகிறோமோ அவர்கள் தவறு செய்து விட்டார்கள் எனும்போது வருவது கடுப்பு.
நான் கடவுள் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வந்திருக்கும் பாலா படம்.
என் நண்பர் ஒருவர் இருக்கிறார் .படங்கள் பார்ப்பதில் மிகவும் ஆர்வம் உடையவர்
குட்பை படமானாலும் சரி .அதை பார்த்துவிட்டு நண்பர்களிடம் அக்கு வேர் ஆணிவேராக விமர்சனம் செய்துவிடுவார் .பல வருடமாக அவர் கணிப்பு எதுவும் பொய்யானது இல்லை.

நான் கடவுள் படம் வெளியான நாள் அவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ் விமர்சனம் ;
இந்த படம் உனமுற்றோர் வாழ்வில் ஏற்படும் சவால்களை சித்தரிக்கிறது /
சேது,நந்தா,பிதாமகன் வரிசையில் பாலாவின் வெற்றி பயணம் தொடர்கிறது /நடிப்பில் சிகரம் தொட்டு விட்டார் ஆர்யா /கண்ணில்லாமல் நடித்து நம் கண்களை குலமாக்குகிறார் பூஜா /தமிழ் படங்களின் பாதையில் இப்படம் ஒரு மைல் கல் என்பதில் சந்தேகமில்லை /பாலாவின் உழைப்பு ஒவ்வொரு காட்சிலும் தெரிகிறது /அனைவருக்கும் தேசிய விருது நிச்சயம் /

இப்படி சொன்னார் .மற்றவர்களை போல நானும் விகடன் மார்க் எத்தனை என எதிர்பார்த்து ஏமாந்தேன் .நாற்பத்தி நாலு என்பது வீணாய் போன விஜய் ,தனுஸ் படங்களுக்கு கொடுக்கப்படும் மார்க் ஆகும், கமலுக்கே புரியாத ஹே ராம் க்கு எத்தனை மார்க் என பாருங்கள் புர்யும்.அதைவிடவா கேவலமாகிவிட்டது பாலா படம் ?

ஊனமுற்றோர் வாழ்வை வைத்து படம் எடுத்து ,மனிதாபிமானம் இல்லாமல் பணம் சம்பாதிக்கிறார் பாலா என குமுதத்தில் ஒ பக்கத்தில் வாந்தி எடுத்துருக்கிறார் ஞானி .கலைஞரை வைத்து பணம் சம்பாதிக்கும் இவர் சொல்கிறார் .


விகடனின் புதிய முதல் தயாரிப்பு படமான சிவா மனசுல சக்திக்கு போட்டியாகநான் கடவுள் வந்துவிடும் என பயந்தே விகடன் தரமான படத்திற்கு துரோகம் செய்து விட்டது .விகடன் தயாரிப்பு படம் சிவா மனசுல சக்தி .
அந்த கன்றாவி படத்தை லக்கி லுக் விமர்சனம் செய்துள்ளதை பாருங்கள் .அதே சமயம் இப்படத்தின் நாயகி போஸ்டரில் பார்க்க கூட லாயக்கில்லாதவர் என்பது போஸ்டர் பார்த்தாலே தெரியும் .ஆனால் இவரது இந்த விமர்சனம் ,இவர் மேல் இருந்த நம்பிக்கை யை கெடுக்கிறது.நான் கடவுள் படத்தை எந்த எதிர் பார்ப்பும் ?இல்லாமல் இவர் செய்த விமர்சனம் நச் .

காதலர் தினமான இன்று ஈரோடு அபிராமி தியேட்டரில் நான் கடவுள் படத்திற்கு காதலர் கூட்டம் அதிகமாக இருந்தது ., நல்ல மூட் இருக்கிற நாள்ல இந்த படத்திற்கு வந்த்ருக்கான்களே என்று நினைத்தேன் .ஆனால் நினைத்ததற்கு மாறாக படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கை தட்டியதும் மெய் சிலிர்த்தேன் .படம் நிச்சயம் ஓடும் .
நல்ல படங்கள் முதலில் இளைஞர்களை தான் கவருகின்றன.
நான் கடவுளை பொறுத்தவரை ,இளையராஜா ..தான் எப்போதும் ராஜாதான் என நிருபித்து இருக்கிறார் .பாலா வுக்கு நூறு சேது படம் .ஆர்யாவுக்கு சிறந்த விசிட்டிங் கார்ட் .பூஜா வுக்கு நடிகையர் திலகம் என பட்டம் தரலாம் .ரஜினி
விமர்சனமே இப்படத்திற்கு சிறந்த விமர்சனம் /இது போன்ற படம் இதுவரை வந்ததும் இல்லை.இனி வர போவதும் இல்லை .-ரஜினி .

நாடாளுமன்ற கட்டடம் அருகேவைகோஉண்ணாநிலை போராட்டம்

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சிக்கலில் மத்திய அரசு அக்கறையின்றி செயற்படுவதாக இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அத்வானி குற்றம் சாட்டியுள்ளார். இலங்கை இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரியும், சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்குவதை கண்டித்தும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் புதுடில்லியில் நாடாளுமன்றம் அருகே இன்று வெள்ளிக்கிழமை உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.

புதுடில்லி ஜந்தர் மந்திர் பகுதியில் உள்ள நாடாளுமன்ற கட்டடம் அருகே காலை 8:00 மணிக்கு உண்ணாநிலை போராட்டம் தொடங்கியது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்வைகோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் அத்வானி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன், தேசியச் செயலாளர் அ.ராஜா, பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.இராமதாஸ், பொன்னுசாமி, அ.கி.மூர்த்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


அத்வானி ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் நடைபெற்று வரும் போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மீதும் குண்டுவீசித் தாக்கப்படுகின்றது.

உலக வரலாற்றில் மருத்துவமனைகள் தாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இத்தகைய கொடுமையை நான் இதற்கு முன் கேள்விப்படவில்லை. இலங்கை வடக்குப் பகுதியில் தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தாக்கப்படுகின்றனர்.

இவை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் கவலையளிக்கும் விடயமல்ல. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டிய விடயமாகும்.

இலங்கை தமிழர்களுக்காக இந்தியாவில் உள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், இதில் வருத்தமளிக்கக்கூடிய விடயம் என்னவெனில், இந்த சிக்கலைத் தீர்க்க வேண்டிய மத்திய அரசு இந்த விடயத்தில் பொறுப்பின்றி செயற்படுகின்றது.

இலங்கை இனச் சிக்கலுக்கு போர் மூலம் தீர்வு காண முடியாது. அமைதிப் பேச்சுக்கள் மூலமாகவே தீர்வு காண முடியும். எனவே, இலங்கையில் போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சுக்கள் தொடங்கப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்றார் அத்வானி.



முன்னதாக வைகோ ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் அப்பாவி தமிழர்களை படுகொலை செய்வதற்கு இந்திய அரசுதான் அனைத்து உதவிகளையும் வழங்குகிறது. இராணுவ உதவி, ஆயுத உதவி, தொழில்நுட்ப உதவி போன்ற அனைத்தையும் சிறிலங்காவுக்கு இந்தியா வழங்குகின்றது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது போது சிறிலங்காவுக்கு எந்த உதவியையும் இந்தியா வழங்கவில்லை. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து, நோர்வே, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியா இதுவரை பெயருக்குக்கூட போரை நிறுத்தும்படி வலியுறுத்தவில்லை என்றார் வைகோ.

இப்போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இலங்கை தமிழர்களை பாதுகாக்க வேண்டும், இலங்கைக்கு வழங்கும் ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அவர்கள் தாங்கியிருந்தனர்.

செய்தி,படங்கள்: நன்றி ' புதினம் '

சனி, 7 பிப்ரவரி, 2009

இதை படிக்காதீங்க

#இதுவரை முரண்டு பிடித்துவந்த நடிகர் கம் தலைவரை டெல்லி வசமாக வலைதுவிட்டதாம் அங்கு போய்..இங்கு கூட்டணி என்பாராம் .முதுகு வலிகாரருக்கு கொஞ்சம் இதனால் வலி குறைந்து இருக்கிறதாம் .


#புலி தொடர்புகளை பகிரங்கமாக மேடைகளில் சொல்லிவரும் தலைவரை ,தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யலாமா என்று ஆலோசனைகள் செய்யபடுகிரதாம் தேர்தல் தலைவலியும் தீரும் என நினைக்கிறார்களாம் .
#மத்திய உள்துறையில் இருந்து தமிழகத்திற்கு கடிதம் வந்திருக்கிறது.அனைத்து போராட்டங்களையும் தயவு பார்க்காமல் ஒடுக்க வேண்டுமாம் .


#கட்சியை கலைத்து விட்டு மீண்டும் தாய் கழகத்தில் இணைந்து விட சொல்லி சுப்ரீம் நடிகரை மனைவி நடிகை நச்சரிக்கிறாராம்
சகோதர யுத்தம் என்று சொல்லி சொல்லி அறிக்கை விடும் கலைஞர் மீது புலிகள் வருத்தத்தில் உள்ளதாக தகவல் .சக இயக்க தலைவர்களை கொலை செய்தார்கள் என்ற ஜெ வின் கொள்கையை நினைவு படுத்தும்படி உள்ள இந்த அறிக்கையால்
புண்பட்ட புலி தலைவர் கலைஞர்களுக்கு தன்னில்கை விளக்கம் எழுத போகிறாராம்.அதில்,தமிழ் ஈழத்துக்காக போஅரடும் தங்களை பலவீனப்படுத்தும்
அடிப்படையில் இப்படி சொல்ல வேண்டாம் என கேட்டு கொள்ள போகிறாராம் .
நன்றி-விகடன்

வியாழன், 5 பிப்ரவரி, 2009

ஈழ தமிழர்பிரச்னை -மக்கள் கருத்து -குமுதம் சர்வே முடிவு

ஈழதமிழர் விவகாரத்தில் தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என குமுதம் ஒரு சர்வே எடுத்துள்ளது ..
இலங்கை பிரச்னை தமிழக மக்களின் தீர்ப்பு -பர பர சர்வே என தலைப்பு கொடுத்துள்ளது.
தமிழக மக்களுக்கு இலங்கை
vivagaarathil ஆர்வம் இல்லை என காங்கிரசார் சொல்லி வரும் சூழ்நிலையில் ,முத்துக்குமார் தீக்குளிப்புக்கு மறுநாள் தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டது .
''மத்திய அரசு இந்த பிரச்சனையில் உடனடியாக தீர்வு காணவேண்டும் .அவர்களுக்கு அந்த கடமை உள்ளது இங்குள்ள தமிழ் மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு ஒட்டு போட்டதால்தான் அவர்கள் ஆட்சியில் உட்கார்ந்து அதிகாரத்தை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் .தமிழர்களிடம் வாங்கிய ஓட்டுக்கு நன்றி கடனாக இலங்கை தமிழர்களை காப்பற்ற மத்திய அரசு முயன்றிருக்க வேண்டும் அந்த கடமையிளுருந்து மத்திய அரசு தவறி விட்டது ''
என கோவை மக்கள் சொல்லியிருக்கின்றனர் .
'ராஜிவ் காந்தியை கொன்று விட்டார்கள் என்பதற்காக ,அவர்கள் அழியட்டும் என பல்லையிரகணக்கான உயிர்களை பழி கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என திருச்சி மக்கள் கேட்கின்றனர்.
''போர் என்ற பெயரில் தமிழர்களை கொன்று குவிப்பது அராஜகத்தின் உச்சகட்டம் .ஆட்சியிலிருந்து கருனாநீதி ராஜினாமா செய்துவிட்டு ,போராட்டம் seithaalthaan அப்பாவி தமிழர்களை காப்பற்ற முடயும் .''என
கோவையை சேர்ந்த ஜீவா லக்ஸ்மி கூறுகிறார் ..
சரி இலங்கை பிரச்னை வருகிற பாருளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமா என கேட்டால் ,'ஆம்'' என்றே பெரும் பாலானோர் கூறுகின்றனர் .
ராஜிவ்காண்டி மரணத்திற்காக காங்கிரஸ் அப்பாவி தமிழர்களை பழிவாங்குகிறது என்று நெல்லை மக்கள் கொந்தளிகின்றனர் .
மக்களிடம் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் சர்வே முடிவுகள் ;
மத்திய அரசு இலங்கை தமிழர்களை காப்பற்ற முயன்றதா?
ஆம் -நான்கு % மக்கள்
இல்லை -தொண்ணுற்று ஆறு %மக்கள்

இலங்கை பிரச்னை பாருளுமன்ற தேர்தலில் வெளிப்படுமா?
ஆம் _அறுபத்தி எட்டு %மக்கள்
இல்லை _முப்பத்தி இரண்டு %மக்கள்

''இந்திரா காந்தியை சுட்டு கொன்றது ஒரு சீக்கியர் தான் அதற்காக சீக்கியர்களை காங்கிரஸ் புறக்கநிததா ?நம் பிரதமர் ஒரு சீக்கியர் தான் .பங்களாதேஷ் பிரச்சனையில் தலையிட்டு பங்களாதேஷ் மக்களுக்கு தனி நாடு வாங்கி கொடுத்த இந்தியா இப்போது தயங்குவது ஏன்? என சென்னை மக்கள் கேட்கின்றனர் .
''அடி மனதில் மிகுந்த பரிவுடனும் வருத்தத்துடனும் அரசியல் தலைவர்கள் மீது கோபத்துடனும் இருக்கிறார்கள் தங்களுக்கு ன்வைப்பு கிடைக்கும் பொது தங்கள் எண்ணங்களை தீர்க்கமா முறையிழ்க் வெளிப்படுத்துவார்கள் மக்கள் என்றே தோன்றுகிறது ;இந்த மக்கள் அலை சரியான தீர்வு கிடைக்கும் வரை ஓயாது ''

செவ்வாய், 3 பிப்ரவரி, 2009

சற்குரு ஜக்கி வாசுதேவ் -சில உண்மைகள்




ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாளினை சிவராத்திரி என்கிறோம் .வருடத்தின் பனிரெண்டு சிவராத்திரி நாட்களில் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி யையே மகா சிவராத்திரி என்கிறோம் ..இந்த நாள் மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும் .


விஞ்ஞானரீதியாகவே மகா சிவராத்திரி நாள் ஒரு மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு மிக பெரும் உறுதுணையாக இருக்கிறது மகா சிவராத்திரி நாளன்று ,கோள்களின் அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கிறது .அந்த நாளன்று விழிப்புடன் ,முதுகு தண்டை நேர்நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஒரு மனிதனுக்குள் ஆன்ம எழுச்சி நிகழ இயற்கையாகவே ஒரு சூழ்நிலை உருவாகிறது .மிக நீண்ட வருடங்களாகவே இந்தியாவின் பல்வேறு புனித தளங்களிலும் ஆலயங்கச்ளிலும் சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது .




யோக மரபில் சிவன் ஒரு கடவுளாக வழிபட படாமல் ஆதி குருவாக ,முதலாவது குருவாக கருதபடுகிறார் .ஆன்மீக பாதையில் இருக்கும் ஒரு மனிதர் அந்த நாளில் தான் கைலாய மலையுடன் ஒன்றினைகிறார் .அவர் ஒரு மலையை போல முழுமையான நிச்சலனமாகிறார் .


பல்லாண்டு ஆத்மா சாதனைகளுக்கு பிறகு ,ஒருநாள் அவர் முழு நிச்சலனத்தில் ஆள்கிறார்.அந்த நாள்தான் மகா சிவராத்திரி ஆகும் .அந்த நாளில் அவருள் இருக்கும் அனைத்து சலனங்களும் அசைவற்று போகின்றன.


உலகமெங்கும் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கோவை ஈச மையத்தில் கூடுகின்றனர்.உடலையும் மனதையும் செம்மைப்படுத்த ,மூட நம்பிக்கை இல்லாத வழிமுறைகளை சற்குரு வாசுதேவ் வழிகாட்டுகிறார்.இசை,நடனம்,கர்நாடக ,தமிழ் இன்னிசை கீதங்கள் பிரபல வித்வான்களால் பாட ,அதை கேட்க மிகவும் இனிமையான தருணமாக விளங்கும் .

வெள்ளி, 30 ஜனவரி, 2009

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் நிகழ்த்திய அற்புதம்

seshadri swamigalபொதுவாக மகான்கள் செய்யும் காரியங்கள் பலவற்றிற்கும் நமக்கு முதலில் அர்த்தம் புரியாது. பைத்தியக்காரத்தனமாகத் தான் அது நமக்குத் தோன்றும். ஆனால் பின்னர் உண்மை புலப்படும்.

அவ்வாறு பற்பல அற்புதங்கள் புரிந்து பக்தர்களின் கர்ம வினையைத் தாம் ஏற்று, அவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்த மகான்களுள் மிக முக்கியமானவர் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். ‘தங்கக்கைச் சாமி’ என்றும் ‘கிறுக்குச் சாமி’ என்றும் பக்தர்களால் அழைக்கப்பட்டவர். பலரது வாழ்க்கை உயர்விற்குக் காரணமாக அமைந்தவர். ஞானத் தபோதனரை வாவென்று அழைக்கும் திருவண்ணாமலையையைத் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்.

ஒருமுறை, தெருவில் சவ ஊர்வலம் ஒன்று போய்க் கொண்டிருந்தது. அதனைப் பின் தொடர்ந்து சேஷாத்ரி சுவாமிகள் சென்று கொண்டிருந்தார். அருகே ஓர் மண்டபத்தில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார் சுவாமிகள். பலருக்கும் அதிர்ச்சியாய் இருந்தது. சாவு வீட்டில் இருந்து, அதுவும் குளிக்காமல் தீட்டுடன் திருமண வீட்டிற்குள் நுழைந்து விட்டாரே என சிலர் கோபமுற்றனர். சிலர் திட்டினர். சிலரோ, சுவாமிகள் வந்தது நிச்சயம் நல்லதற்குத் தான் என நினைத்தவாறு அமைதியாக இருந்தனர்.

மகான் அதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை. நேரே சமையல் அறைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய அண்டாவில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. வேகமாகச் சென்றவர் அப்படியே அதைச் சாய்த்துக் கீழே கொட்டிவிட்டு, வேகமாக வெளியே ஓடிச் சென்று விட்டார். எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி, ஆத்திரம். சிலர் திட்டிக் கொண்டே மகானைப் பிடிக்கப் பின்னால் வேகமாக ஓடினர். பயனில்லை. மகான் எங்கேயோ போய் விட்டிருந்தார்.

மகானின் இந்தச் செய்கைக்குக் காரணம் புரியாமல், கீழே கொட்டிக் கிடந்த சாம்பாரைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி போய் வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. மகானை இரு கை கூப்பி வணங்கினர்.

காரணம், சாம்பாரில் ஒரு பெரிய நல்ல பாம்பு செத்துக் கிடந்தது. இதனை மகான் முன்கூட்டியே உணர்ந்து, சாம்பாரை யாரும் உண்டுவிடக் கூடாது, அதனால் ஆபத்தோ, உயிரிழப்போ நேர்ந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் அண்டாவைக் கவிழ்த்தார் என்பதறிந்து அவரைத் தொழுதனர்.

மகான்களின் பெருமை சொல்லவும் அரிதே!

வியாழன், 29 ஜனவரி, 2009

கலைஞர் நாடகம் -குமுதம் அதிரடி கார்டூன்


இலங்கை தமிழர் விவகாரத்தில் ,கலைஞர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதையும்,விஜயகாந்தின் இன்றைய நிலை பற்றியும் குமுதம் இன்று கார்டூன் வெளியுட்டுள்ளது ....ரசியுங்கள் ..

புதன், 28 ஜனவரி, 2009

விஜயகாந்த் எங்கே போனார் ?கண்டுபிடிபோருக்கு ஒரு குவார்ட்டர் பரிசு !

இலங்கை பிரச்சனை தீரும் வரை ,என் கட்சியினர் அனைவரும் சட்டையில் கருப்பு பேட்ச் குத்தி கொள்ள வேண்டும் என்று வீர முழக்க மிட்ட விஜயகாந்த் ,இன்று இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாக சாகும் பொது குரல் கொடுக்காமல் எங்கே போனார் ..?
ராஜ பக்சே அவருக்கு ஆப்பு வைத்து விட்டாரா ?அல்லது பொட்டி கொடுத்தாரா..அல்லது கலைஞர் ஆப்பு வைத்து விட்டாரா ?

அல்லது அம்மாவுடன் கூட்டணி வைத்து பொழைப்பு ஓட்டனும்ன ,சும்மா இரு என சோ அடக்கிவிட்டாரா... அல்லது பண்ருட்டி டெல்லி போனாரே.அப்போ குள்ளாகளிடம் பேச்சு வார்த்தை வெற்றி அடைந்து கலைஞரை மிரட்ட ,விஜயகந்த் கூட்டணி அவசியம் என முடிவெடுத்து
கூட்டணி வெச்சு ,உன்னை பாராளுமன்றத்துக்கு கூட்டிட்டு போறேன் ....புலிகளை அழிக்கும் வரை வாயை தொறக்காம இரு ,என டெல்லி சொல்லியதா..
அல்லது பதிமூனாயிரம் ஒட்டு வாங்கி தலை குப்புற விழுந்தார் ....அந்த சோகத்தில் இன்னும் தெளியவில்லையோ ........
இஸ்க்கோலு பசங்க எல்லாம் உண்ணாநிலை இருந்து சாக கிடக்கிரானுன்களே ..அப்பகூட ஊமைய இருக்காரே ..என்னன்னு விளங்கலியே ?
அம்மா இன்னிக்கு ஒரு முத்து மாதிரி ஒரு அறிக்கை விட்ருகாங்க...போரை நிறுத்தம் வேண்டுமெனில் ,விடுதலை புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டுமாம் ...அறிக்கை நா இதாண்டா அறிக்கை ......சோ பேச்சை கேட்டுகிட்டு தமிழர்களுக்கு மகா பாதகம் செய்யாதீங்க தாயே ....எல்லா உயிரிலும் நான் இருக்கிறேன்னு பகவான் சொன்னது ராமாயணம் உரை எழுதிய சோ வுக்கு தான் தெரியாது ..உயிர்கள் வதைபட கூடாது என கோவில்களில் ஆடு வெட்ட கூடாது என தடை போட்ட ..நீங்களுமா....சாகும் உயிர்களை வேடிக்கை பார்க்கிறீர்கள்?
நீங்கள் களத்தில் போராடினால் நிச்சயம் உலகின் கவனம் திரும்பி ,போர் நிற்கும் எனும் போது...எதிர்க்கட்சி தலைவியாக
பலம் பொருந்தியவராய் நீங்கழ்க் இருந்த போதும் ....இன்னும் என்ன தூக்கம் ?

கலிஞர் பெட் ல படுத்துகிட்டு மானாட மயிலாட பார்கிராறு ....உடம்பை பத்திரமா பார்த்துக்குங்க அய்யா!
ராமதாஸ், தமிழர்களே ஒன்று திரளுங்கள் நு ஒரு வருசமா ,கொந்தளிக்கிராறு .....ஏன் அன்புமணியை ராஜினமா பண்ணிட்டு ஊட்டுக்கு வான்னு சொன்னா ,,தமிழ்நாட்டில் அன்புமணிக்கு செல்வாக்கு கூடாதா ?
செங்கல்பட்டு மாணவர்கள் .சாகும் வரை உண்ணாநிலை போராட்டம் ,அறிவித்து எழு நாள் ..மயங்கி கிடந்த குரல் ஒன்றே போதும் .....குழந்தையும் தெய்வமும் ஒன்று என உலகிற்கு புரிய வைக்க....
ராவணன் எத்தனை படைகளை நிறுத்தினாலும்....எத்தனை பேரை துணைக்கு அழைத்தாலும் ...
ராமன் அணில் போன்ற சிறு உதவிகளை வைத்து கொண்டே ,,,,கடைசியில் ராவணனை கொல்வான் ...தமிழ் ஈழம் வெல்வான் ....!

செவ்வாய், 27 ஜனவரி, 2009

தமிழ் சினிமா வில் காங்கிரஸ் பங்களிப்பு என்ன ?

தமிழ் சினிமாவின் கதை / அறந்தை நாராயணன் / நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
பட்டி தொட்டியெல்லாம் பாடல்கள் மூலம் பகுத்தறிவும் திராவிடமும் பரவி வந்த வேளையில் தேசியவாதிகள் என்ன செய்தனர்? காங்கிரஸ் ஆதரவுக் கலைஞர்களின் பங்களிப்பு என்ன? என்பதைத் தெரிந்து கொள்ள மீண்டும் அறந்தை நாராயணன்:
தேசியவாதியான நடிகர் பி.ஆர்.பந்துலு 1959-ல் தனது பத்மினி பிக்சர்ஸ் சார்பில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்தை கேவா கலரில் படமாக்கி லண்டன் சென்று அதை டெக்னிகலராக மாற்றி வெளியிட்டார். சுதந்திரம் பெற்ற தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டம் பற்றியதோர் கதை 12 ஆண்டுகளுக்குப் பிறகே வெளிவந்தது.
சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவும், ஜாவர் சீதாராமன் பானர்மென்னாகவும் நடித்தனர். எஸ்.வரலட்சுமி, பத்மினி ஆகியோரும் நடித்த இந்தப் படத்தின் கதை ஆலோசனைக் குழுத் தலைவராகத் தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ. சிவஞானம் இருந்தார்.
‘பராசக்தி’, ‘மனோரமா’ படங்களில் நீளநீளமான வாக்கியங்களில் வசனம் பேசிய சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மனில் சக்தி கிருஷ்ணசாமியின் வித்தியாசமான வசனங்களைப் பேசினார்.
“நீலவானிலே செந்நிறப் பிழம்பு! அந்த வட்ட ஒளியின் பெயர் சூரியன், சுட்டெரிக்கும் செஞ்சுடர்! அதுதான் நீ என் நெற்றியிலே இட்ட இந்த வட்டமான இரத்த நிறப் பொட்டு…”
ஏராளமான பொருட் செலவில் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார் பந்துலு. அவரே படத்தை இயக்கினார். வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் வீரபாண்டியக் கட்டபொம்மன் பட்ட கஷ்டங்களை விட காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தச் சினிமா கட்டபொம்மன் அதிகச் சிரமங்களை அனுபவிக்க நேர்ந்தது….
1961-ல் பந்துலு ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தை வெளியிட்டடர். ஆங்கிலேயக் கம்பெனிகளோடு போட்டி போட்டுக் கப்பல் கம்பெனி நடத்தி, அதனால் ஆட்சியாளர்களின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாகி சுதந்திரப் போராட்டத்தில் பங்கும் கொண்டு சிறை சென்று சிறையில் செக்கிழுத்த தியாகி வ.உ. சிதம்பரனாரின் கதை….
சுருங்கச் சொன்னால் எடுத்தவர்கள், நடித்தவர்கள், பார்த்தவர்கள் உணர்ச்சிப் பிழம்பாய் இருந்தார்கள்.
ஆனால்-
வியாபாரக் கலை விஷம் போல மலிந்து வியாபித்துத் தமிழர் ரசனையை வக்கரிக்கச் செய்திருந்ததால் படம் வசூலில் வெற்றி பெறவில்லை. தேசியவாதி, காங்கிரஸ்காரர் பி.ஆர். பந்துலு நொடித்துப் போனார்…. வேடிக்கையொன்று சொல்லட்டுமா?
கேளிக்கை வரியை ரத்து செய்து குறைந்த கட்டணத்தில் அனைவரையும் ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தைப் பார்க்கச் செய்ய காங்கிரஸ் ஆட்சியாளருக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் செய்யவில்லை.
1967-ல் ஆட்சிக்கு வந்த தி.மு. கழகம்தான் ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்துக்கு வரிவிலக்கு அளித்தது.
வாஞ்சிநாதன் குடும்பத்தாருக்கு காங்கிரஸ் அரசு பென்ஷன் தரவில்லை என்பதைச் சென்ற பகுதியில் எழுதியிருந்தேன். தி.மு.க். அரசுக்குத்தான் அந்தப் பெருமையும் கிடைத்து.
மக்களோடும் காங்கிரசுக்குத் தொடர்பில்லை; மக்கள் தொடர்புச் சாதனங்களோடும் நல்ல சகவாசம் இல்லை. அதனால்தான் மாநிலக் கட்சிகள் முன் மண்டியிடும் நிலைமை.
‘பராசக்தி’ படம் வெளிவருவதற்கு மணிக்கொடி சீனிவாசன் உதவினார் என்று எழுதியிருந்தேன். ஆதித்யா என்ற நண்பர் இந்தச் செய்தி கழக இதழ்களில் வரவில்லையே என்று கேட்கிறார். அதற்கு ‘அறிவாலயம்’தான் பதில் சொல்ல வேண்டும். அறிவாலயம் சொல்லாததை ‘தாயகம்’ சொல்கிறது. தாயகமும் மணிக்கொடி சீனிவாசனைப்பற்றி சொல்லவில்லை. ம.தி.மு.க. சார்பு உடையவரும் சிறந்த பத்திரிக்கையாளருமான திரு. க. திருநாவுக்கரசு எழுதிய திராவிட இயக்கமும் திரைப்பட உலகமும் என்ற நூலில் பக்கம் 56/57-ஐப் பார்க்கலாம்.
பராசக்தி படம் தணிக்கைக்குழுவின் முன் திரையிடப்பட்ட போது பெரியதொரு விவாதம் நடைபெற்றது. பல காட்சிகளை வெட்ட நினைத்த போது குழுவின் உறுப்பினராக இருந்த ‘சண்டே அப்சர்வர்’ திரு. பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் கடுமையாக வாதிட்டு பராசக்தியை வெளியிடத் துணை நின்றார். வாசகர்களின் திருப்திக்காக கணயாழி, செப்டம்பர் 2000 இதழில் ‘மணிகொடியின் பிதாமகர்’ என்ற தலைப்பில் சிட்டி.பெ.கோ. சுந்தரராஜன் எழுதிய கட்டுரையின் பகுதியைக் கொடுக்கிறேன்:
தணிக்கை அதிகாரியாக இருந்த சீனிவாசன் அனுமதித்த ஒரு படம் சர்ச்சைக்கு உள்ளாகித் திரைப்பட வரலாற்றில் தனி இடம் பெற்றுவிட்டது.
அதுதான் பகுத்தறிவு அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ‘பராசக்தி’ என்ற படம்…
நமது கலாசாரத்தையும் ஆன்மிகத்தையும் குறிப்பாக பார்ப்பனீயத்தையும் சாடும் முறையில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது என்று சிலரால் கருதப்பட்டது. திரைப்படத் தணிக்கைக் குழுவில் அரசாங்க முறையில் அல்லாத தனிப்பட்ட மக்கள் பிரதிநிதியாக இருந்த ஒரு பிரபல பத்திரிகை ஆசிரியர், சீனிவாசனின் செயலைக் கண்டிக்கும் முறையில் தமது பதவியை ராஜினாமா செய்து விட்டார். ராஜாஜி கூடத் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சருக்கு இதுபற்றிப் புகார்க் கடிதம் எழுதியதாகச் சொல்லப்பட்டது. காஞ்சி பரமாசாரியாரும் படத்தின் தன்மையை அறிவதற்காக இரண்டு பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார். எதிர்த்தவர்கள் கருதியபடி படத்தில் ஆட்சேபகரமான அம்சங்கள் இல்லை என்று அவர்கள் தங்களுடைய கருத்தை மடாதிபதியிடம் தெரிவித்தார்கள்.
சினிமாவைப் பற்றிச் சொல்லும் போதே திரைப்படப் பாடல்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். திரைப்படம் என்ற போர்முனையில் பாடல்களை எழில்மிகுந்த ஏவுகணைகள் என்று சொல்லலாம். பத்து ரீல்கள் செய்ய முடியாததை ஒரு பாடல் செய்துவிடும்.
பாட்டுப் புத்தகங்களின் அட்டையில் தி.மு.க. தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்டன. வசனப் புத்தகங்களும் பெருமளவில் விற்கப்பட்டன. காந்தியத்திற்கு வெள்ளை என்றால் திராவிடர் இயக்கத்திற்குக் கறுப்பு; காங்கிரசுக்குக் கதர் என்றால் தி.மு.க விற்கு கைத்தறி என்று எதிர்மறையாகவே எல்லாம் நடந்தது.
மக்கள்தொகையில் ஒரு பகுதி நெசவுத் தொழில் ஜீவனமாகக் கொண்டிருந்த வேளையில் ‘சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி’ என்ற பாடலை எழுதியவர் பொதுவுடமைவாதியான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ஆனால் இதைத் தி.மு.க.வினரே பயன்படுத்தினர்.
‘மலைக்கள்ளன்’ (1954) திரைப்படத்தின் கதை தேசியவாதியான நாமக்கல் கவிஞரின் எழுத்தில் உருவானது. இந்தப் படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர்., வசனம் மு.கருணாநிதி. இந்தப் படத்தில் ‘தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற பாடல் இடம்பெற்றது. பாடலாசிரியர் நாமக்கல் கவிஞர். படம் வெளிவந்தபோது இந்த வரிகளை மேற்கோள் காட்டாத தி.மு.க. மேடைகளே இல்லை. இதே நாமக்கல் கவிஞர் ‘கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்று உப்புச் சத்தியாகிரகத்தைப் பாடினார். அது எத்தனை காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியும்?
‘திராவிடர் இயக்கத்தில் திரைப்படப் பாடல்களின் தாக்கம்’ என்று ஒரு புத்தகமே எழுதலாம்; வசனத்திற்கு இன்னொன்று.
மேற்கோள் மேடை:
ஹிந்து மதத்தில் எவரும் சேர்த்துக் கொள்ளப்படுவதும் இல்லை; எவரும் விலக்கப்படுவதும் இல்லை. ஒரு முஸ்லீமும் கிறிஸ்தவனும் ஆக்கப்படுகிறான். ஒரு ஹிந்து பிறக்கிறான். மற்ற மதங்களுக்கு அவன் மாறிப் போவது ஏதோ உத்யோகம் பார்க்க உடை மாறிப் போவது மாதிரிதான்.
- ஜெயகாந்தன் / ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்

-எழுதியவர்-சுப்பு .தமிழ் இந்து -தளம்

திங்கள், 26 ஜனவரி, 2009

சிங்களர் கொலைகாரர்கள் -மாதா அமிர்தானந்த மயி

இலங்கை தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசு மோசமானது .கேட்டது என நான் இப்போது புரிந்து கொண்டேன்.அவர்கள் கொலைகாரர்கள்.இலங்கை சுனாமியால் தாக்கப்பட்ட போது...இலங்கை தமிழர்களுக்கும் வீடுகள் கட்டி கொடுத்தோம் ...சிங்களர்களுக்கும் வீடுகள் கட்டி கொடுத்தோம் ...இன்று அந்த தமிழர்கள் வீட்டை மட்டும் அல்ல ..தன் நாட்டையே இழந்து காடுகளில் அண்டி கிடக்கிறார்கள் ....
தன் கணவரை கொன்றவர் ...பிரபாகரன் என்பதற்காக ,,சோனியா காந்தி விடுதலை புலிகளை அளிக்க நினைக்கிறார் ..தமிழர்கள் அழிந்தாலும் பரவுயில்லை ...புலிகள் கூண்டோடு அளியவேண்டுமென ....ராணுவ ஆலோசனைகளும் சிங்களர்களுக்கு வழங்க படுகிறது என நக்கிரன் பேட்டியில்
தெரிவித்துள்ளார்.
பொறுப்பின்மை ?
கலைஞர் முதுகு வலியால் ஒருவாரம் அவருடைய நிகழ்ச்சிகள் தள்ளி வைப்பு ..முதுகு வலி வரும் என எச்சரித்தும் நேற்று நடந்த முதல்வர் பாராட்டு விழா வில் மூணு மணி நேரம் தன் மீதான புகழுரையை ரசித்தார் கலைஞர்

செவ்வாய், 13 ஜனவரி, 2009

வில்லு -எனது பார்வையில் .....


வில்லு... விஜய் நடித்த படம் என்பதை விட ,பிரபு தேவா இயக்கம் என்பது என்னை கவர்ந்தது ..போக்கிரி இல் அவர் செய்த சின்ன சின்ன ரசனையான விஷயங்கள் ..படத்தின் வேகம் ,ஒளிப்பதிவு இன்னும் மனதை விட்டு அகலவில்லை.காதல் ,காமெடி,சென்டிமென்ட் ,டயலாக்என எல்லாவற்றிலும் ஒரு நாசுக் இருக்கும்.அது நம்மை ரசிக்க வைக்கும் ..


அப்படி இந்த படத்தில் எதிர் பார்த்தேன் .ஏமாந்தேன் ...
போக்கிரியில் வடிவேலு காமெடி ...படத்தோடு ஒன்றி வருவார்.அசினோடு அவர் செய்யும் லூட்டிகள் சிரிக்க வைக்கும் .இந்த படத்தில் ஒரு காட்சி மட்டுமே என்னை சிரிக்க வைத்தது.
போக்கிரி பாடல்கள் ...எல்லாமே ஹிட் அடித்தவை .இதில் ஒன்றும் தேறவில்லை .
கஜினி இல்ஜொள்ளு விட வைத்த நயந்தாரா இதில் இல்லை .கன்னம் எல்லாம் ஒடுங்கி போய்....ஒல்லி பிச்சானாக உள்ளார் ..
படம் kathai என்ன ...தன் தந்தை சாவுக்கு காரணமான மூன்று பேரை தேடி கொள்கிறார் விஜய்.தந்தையும் அவரே.தந்தை வேடத்தில் அவரை பார்க்கும் போதுவேடம் பொருந்தாமல் பரிதாபமாக இருக்கிறார் ...ரஞ்சிதா ஜோடி.அக்கா போல இருக்கிறார் .
காதல் காட்சிகள்,காமெடி காட்சிகள் மனதில் ஒட்டவில்லை.சண்டைகள்.நடனங்கள் வழக்கம் போல்.ஆதி படம் நினைவுக்கு வருகிறது.
படம் முடிந்து வெளியே வரும் போது கல்லூரி மாணவர்கள் சங்கு ஊதினார்கள்;

சனி, 10 ஜனவரி, 2009

ஈழ தமிழர் விடுதலை -அன்னை இந்திரா காந்தி சொன்ன ஒரே வழி.!





சுதந்திர தமிழ் ஈழமே நிரந்தர தீர்வு.அது பேச்சு வார்த்தை மூலமாக நடந்தாலும் சரி.விடுதலை புலிகளின் போர் மூலமாக நடந்தாலும் சரி.



விடுதலை புலிகளின் வீழ்ச்சி என்பது போலியான புத்தமத வெறியுடன் அரசாட்சி செய்யும் சிங்கள இனவாத அரசுக்கு வெற்றியாகலாம்.ஆனால் இந்தியாவிற்கு அது கேவலமான தோல்வி.



அன்னை இந்திர காந்தி இருந்திருந்தால் இந்நேரம் ஈழ வெற்றி நிறைவேறி இருந்திருக்கும் ஈழமக்களின் துர் அதிர்ஷ்டமோ என்னவோ அன்னை இந்திராகாந்தி அகால மரணம் அடைந்துவிட்டார்



அன்னை இந்திராவை சீக்கிய இனத்தவர் கொன்றார்கள் என்பதற்காக சீக்கியர்களை நிரந்தர எதிரி கலாகவா நாம் பார்க்கிறோம் ?அந்த இனத்தை சேர்ந்த மதிப்புமிக மன்மோகன்சிங் அவர்களை பிரதமராக தேர்ந்தேடுதுல்லோமே ?ராஜிவ் காந்தியை தமிழ் .....(தொடர்ச்சி கீழே உள்ள படத்தை பெரிதாக்கி படியுங்கள் )


நன்றி-கனக சுப்பு ரத்தினம் ,கவனகர் முழக்கம் மாத இதழ் .

ஞாயிறு, 30 நவம்பர், 2008

புதிய உள்துறை அமைச்சர் சிதம்பரம்

மத்திய உள்துறை அமைச்சர் பதவயில் இருந்து சிவராஜ் பாட்டில் ராஜினாமா செய்துள்ளார் ...மும்பை தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்று ...அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் .புதிய அமைச்சராக சிதம்பரம் நியமிக்க பட்டுள்ளார் ..நிதி இலாகா பிரதமர் எடுத்து கொண்டார் ,,,
ஏற்கனவே நிதி இலாகாவை நாசமாக்கி ,இந்தியாவை பொருளாதார சரிவு நோக்கி செலுத்தி கொண்டுள்ள சிதம்பரம் ,,,அப்பாடா இனிமேல் தக்காளி விலை உயர்வுக்கு இனி எந்த வக்காளி யும் கேள்வி கேட்க்க முடியாது என்று குசியுடன் பதவி ஏற்று கொண்டாராம் ..தெரிஞ்ச வேலையவே ஒழுங்கா செய்யாத இந்த ஆளு என்னத்த உள்துறை மந்திரி ஆகி ..என்னத்த இந்தியாவ பாதுகாத்து ..இந்தியன் பாவம்..
ஒரு படத்தில்
வடிவேலு தங்கச்சி கருப்பா இருக்கும் ..கவுண்டமணியும் ,செந்திலும் ..தப்பிக்கிறதுக்காக அய்யா நான் ஒரு முடிச்சவிக்கி ....அய்யா நான் ஒரு மொள்ளமாரி என மாத்தி ..மாத்தி கெஞ்சுவார்கள் .அது போல பிரதமரிடம் எல்லா அமைச்சர்களும் கெஞ்சி இருப்பார்களோ ...
ஹரிஹரன் என்ற பதிவர் சொன்னது போல ...நாட்டு மக்களுக்கு தைரியம் சொல்லும் பிரதமர் பூனை போல கீச்சு கீச்சு என்று பேசுகிறார் ,ஆண்மை,வீரம் இல்லாத இந்த பிரதமர் எப்படி இவ்வளவு பெரிய நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பற்ற முடியும் ....

ஞாயிறு, 23 நவம்பர், 2008

கலைஞர் முதல்வருக்கு ஒரு கடிதம்

கருணாநிதிக்கு ஒரு கடிதம்
தமிழக முதல்வர் டாக்டர் திரு. மு. கருணாநிதி அவர்களுக்கு,வணக்கம்!கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தமிழகத்தில், ஈழம் பேசு பொருளாகியிருக்கிறது. எண்பதுகளில் தொடங்கிய உணர் வலைகள், இடையில் போடப்பட்ட அணையை உடைத்து மீண்டும் கிளர்ந்திருக்கிறது. ஈழத்தில் அன்றாடம் குண்டுவீச்சில் சின்னாபின்னமாகும் மக்களின் துயர் பற்றிப் பேசினாலே, அது புலிகளைப் பற்றிய பேச்சாக மாற்றப்பட்டு, ஈழம் குறித்த பேச்சையே தடுத்துவிட வேண்டும் என்ற உங்கள் கூட்டணி நண்பர்களான காங்கிரஸ்காரர்களின் கவலை புரிகிறது.ஈழத்தமிழர் படுகொலைகளுக்கு இந்தியாவே மெளனசாட்சியாக இருக் கிறது என்ற ஜெயலலிதாவின் அறிக்கை யின் விளைவாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினீர்கள். ‘இரு வார காலத்துக்குள் போர் நிறுத்தப்படா விட்டால், நாற்பது எம்.பி.க்களும் ராஜினாமா’ என்றீர்கள்.காட்சி விரைவாக மாறியது. வைகோ, கண்ணப்பன், அமீர், சீமான் என அடுத்தடுத்துக் கைதுகள் நடந்தன. அந்தக் கைதுகளுக்குக் காரணம் ஜெயலலிதா என்று பெரும்பாலானோர் நம்பினார்கள். நீங்களும் ஜெயலலிதாவும் காங்கிரஸும் ஆடிய சூதாட்டத்தின் பலியாடுகள் அமீரும், சீமானும். உங்கள் பழைய சகாவான ராமதாஸைப் பாருங் கள்... டெல்லியில் புலிகளைப் போராளி கள் என்கிறார். சென்னையில் அவர் சார்பில் பேசுகிற ஜி.கே. மணி, "புலிகளைப் பார்த்ததுகூடக் கிடையாது... எங்களுக்கும் புலிகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை’ என்று சட்டத்துக்கு பயந்து ராமதாஸின் கருத்துக்கு அந்தர் பல்டி அடிக்கிறார். ஒருமுறை நீங்கள் சொன்னீர்கள்: "தேர்தலில் தோற்றால் பெரியார் வழி; ஜெயித்தால் அண்ணா வழி;"’ இன்னும் இரண்டரை ஆண்டுகள் மாநில ஆட்சியில் பாக்கியிருக்கும் சூழலில் நீங்கள் பெரியார் வழிக்குத் திரும்பி விட்டதாகவே நினைத்தேன்.நாளிதழ்களைப் பார்த்தால், நீங்கள் ஈழ மக்களுக்காகச் சுறுசுறுப்பாக நிதி வசூலித்துக் கொண்டிருக்கிறீர்கள்! ராஜினாமா கடிதத்தை முதல் எம்.பி.யாக உங்களிடம் கொடுத்த கனிமொழி ஈழத்துக்கு அரிசியும் ஆடைகளும் அளிக்கிறார் உங்களிடம்! அப்படி யென்றால், போர்நிறுத்தக் கோரிக்கையும் கெடுவும் என்னவானது?மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வந்து பேசுகிறார்... பஸில் ராஜபக்ஷேவோடு டெல்லியிலே பேசி முடிவெடுத்து, அதை ஒரு கூட் டறிக்கையாக இரு நாடுகளும் வெளி யிட்ட பிறகு, சென்னைக்கு வந்து ஒரு தகவலாக மட்டுமே உங்களிடம் சொல்லிஉங்கள் ஒப்புதலையும் பெற்றுச் செல்கிறார். ‘அதுவே எங்கள் கோரிக் கைக்கு வெற்றி’ என்கிறீர்கள் நீங்கள்! என்ன பொருள்...? ஈழத் தமிழர் மீதான தாக்குதல் உங்கள் கெடு தேதி முடியும்போது நிறுத்தப்பட்டுவிட்டதா?சரியாக, 23 வருடங்களுக்கு முன்பு... 4-11-85 தேதியிட்ட ‘முரசொலியில் உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்தில் ("மாவீரன் நெடுமாறன் மேற்கொண்ட ஈழப் பயணத்தை வாழ்த்தி" எழுதிய மடல்) நீங்கள் சொன்னது உங்களின் நினைவாற்றல் பதிவுகளில் நிச்சயம் அப்படியேதான் இருக்கும் என்று எனக்குத் தெரியும்."எங்களுக்குத் தமிழ் ஈழம் தவிர வேறெதுவும் தேவையில்லை என்று இளஞ்சிறார். சிறுமியர் முதல் எழுபது எண்பதை நெருங்கிய முதியோர் வரையில் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்னதை நெடுமாறனின் செவிகள் வாயிலாக நானும் செவிமடுத்தேன்! "எங்களுக்குத் தனிநாடு கிடைக்க எங்கள் போராளிகளை ஊக்கப்படுத்துங்கள்! அவர்களை நிர்பந்தித்துப் பிரச்னையைத் தீர்க்க முயலாதீர்கள். தனித் தமிழ்நாடே எங்கள் லட்சியம்! உங்களால் முடியா விட்டால், எங்கள் தலையில் குண்டு களைப் போட்டு இலங்கைத் தமிழ் இனத்தையே அழித்துவிடுங்கள்!"’ இந்தச் செய்தியை நெடுமாறன் அவர்களிடம் அழுது புலம்பியவாறு சொல்லுகிற காட்சியை இருதயத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டுதான் பார்க்க முடிந் தது!"’என்று நீங்கள் எழுதி யிருந்தீர்கள்.85-க்குப் பிறகான சில நிகழ்வு களின் காரணமாக "போராளிகளை ஊக்கப்படுத்துவது" என்ற நிலைப்பாடு கேள்விக்குறியாக இருக்கலாம். ஆனால், ஈழத்தமிழனின் உயிர்குடிக்கும் சிங்கள இராணுவத்தை ஊக்கப்படுத்துகிற காரியத்தை மறந்தோ, மெத்தனம் காட்டியோ நாம் செய்யலாமா?அரசியல் லாபம் எதுவும் கருதாத ஒரு சாமானியத் தமிழனாக நான் உங்களிடம் கேட்பதெல்லாம்... நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். மத்திய அரசுக்கு வைத்த கோரிக்கைகள் கோரிக்கையாகவே இருக்கட்டும்.இப்போது நீங்கள் திரட்டுகிறீர் களே... பணம், உடை, உணவு, மருந்து...! இதையெல்லாம் இலங்கை அரசே "முறையாக தமிழ் மக்களுக்கு விநியோ கிப்போம்" என்று சொல்வதை நீங்கள் நிஜமாகவே நம்புகிறீர்களா? அல்லது, "ஐ.நா. அமைப்புகள் மூலமும் செஞ்சி லுவைச் சங்கம் மற்றும் மத்திய அரசின் மூலமாகவும் விநியோகிக்க ஏற்பாடாகி யிருக்கிறது" என்று நீங்கள் கூறுகிறீர் களே... அதையாவது நிறைவேற்ற இலங்கை அரசு வழிவிடும் என்று நம்புகிறீர்களா?ஈழத்தின் வடக்குப்பகுதி மீது கொடூரமான போரை சிங்கள ராணுவம் தொடங்கியபோது முதல் வேலையாக அது செய்த வேலை, அங்கு பணியாற்றிக் கொண்டு இருந்த தன்னார்வக் குழுக் களையும் மனித உரிமைப் பணியாளர் களையும் வெளியேற்றியதுதானே...! அதன் விளைவாகத்தானே இன்று நடுநிலைப் பார்வையாளர்கள் யாருமின்றி, தங்கள் துன்பத்தைத் தடுக்க ஆளுமின்றி, உயிர் பிழைத்த மிச்சம் மீதி ஈழத் தமிழர்கள் காடுகளில் போய் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்! இந்நிலையில், நீங்கள் அனுப்புகிற நிதி சிங்கள அரசின் ஆயுதச் செலவுக்குப் போய்விடாது என்பதற்கு என்ன உத்தரவாதம் வைத்திருக்கிறீர்கள்? இந்திய அரசு கொடுத்த ராணுவ உதவியால் தமிழ் மக்கள் மீது குண்டு வீசியவர்கள், இனி தமிழக மக்கள் கொடுக்கிற பணத்தையும் ஈழத் தமிழனுக்கு எதிராகப் பாய்ச்சமாட் டார்கள் என்பது என்ன நிச்சயம்?!இதற்கெல்லாம் உங்கள் பதில் அமைதி என்பதாக இருக்கலாம்! அதன் பின்னணி, மத்தியில் ஆளும் காங்கிரசின் மறைமுக நெருக்கடியாகவும் இருக்கலாம். ஆனால், இந்த காங்கிரஸின் கூட்டணி யும், அதன் நிழலில் இங்கே வாய்த்திருக் கும் இடைஞ்சலற்ற ஆட்சியும் நிரந்தர மல்ல என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? என்றும் உங்களோடு இருக்க வேண்டியது தமிழ் இனத்தின் உணர்வு பூர்வமான ஆதரவு அல்லவா?சிந்தியுங்கள்... அதன் பிறகே நிதியைச் சேர்ப்பியுங்கள்...!உங்கள் மீது தீரா அன்புள்ள,போருக்கு எதிரான ஒரு தமிழன்.- நன்றி: ஜுனியர் விகடன், 05-11-2008

புதன், 19 நவம்பர், 2008

நடிகவேள் எம் ஆர் ராதா-சில ஆச்சரியங்கள்

"உங்களைப் பாக்க எக்கச்சக்கமா மனுஷங்க வர்றாங்க.. நிச்சயமா மக்கள் மனம் கவர்ந்த தலைவராத்தான் இருக்கணும்...."

-தன் அருகிலுள்ள படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த பிரமுகரிடம் கரகரத்த குரலில் கேட்டார் அந்த நடிகர்.

தாம் ஒரு தொழிற்சங்கத் தலைவர் என்றும், தம்மைக் கொல்ல நடந்த தாக்குதலில் தப்பித்து கத்திக்குத்துக்காக சிகிச்சைக்கு வந்த விஷயத்தையும் தமது மாறாத புன்னகையுடன் பதிலாகக் கூறினார் பக்கத்துப் படுக்கையில் இருந்தவர்.

தன்னலமற்ற அவரின் சேவையைக் கேள்விப்பட்டிருந்த நடிகர்,
"நீங்க அப்படியே செத்துருக்கணும்.. அப்பந்தான் தமிழ் நாட்டில் நல்ல பெயர் எடுக்கமுடியும்.. தியாகத்துக்கு இங்க மதிப்பில்லே..."

-உரத்து கரகரத்த குரலில் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

சென்னை ஜி.எச். மருத்துவமனையில் எழுபதுகளின் தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவம் இது.

அந்த நடிகர் நடிகவேள் எம்.ஆர்.இராதா! பதிலளித்தது CITU தொழிற்சங்கத்தலைவர், மார்க்சிஸ்டு கட்சியின் முன்னணித் தலைவர் வி.பி. சிந்தன்!!

-இப்படி ஒளிவு மறைவின்றி சமூகவிமரிசனம் செய்ய நடிகவேளால்தான் முடியும்!

இராதாகிருஷ்ணனுடைய பெற்றோர்களின் பூர்வீகம் ஆந்திராவானாலும், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில்தான் பிறந்து வளர்ந்ததெல்லாம்.

தந்தையிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறித் தஞ்சமடைந்து ஜெகன்னாதையரின் நாடகக் கம்பெனியில்தான்.

சிறிய வயதிலேயே ‘பாயசம்' என்ற பாத்திரத்தில் பிரபலமாகி ராஜாஜியால் பாராட்டப்பட்டவர்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘சந்தனத்தேவன்' படத்தில் கதாநாயகன் வேடம். அதன் அதிபரான டி.ஆர் சுந்தரத்திற்கு - மெட்ராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ணன் என்கிற நீளமான பெயர் பிடிக்கவில்லை. முன்னும் பின்னும் வெட்டி - எம்.ஆர்.
ராதாவாக்கினார். ராதா கதாநாயகனாக நடித்த முதல் படம். வெளிவந்தது 1939இல்.

திரைப்படத்தில் 1939-ல் நுழைந்தாலும் நாடகத்தை மறக்காது வளர்த்த கலைஞர் இராதா. "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்ற வாசகங்கள் அவரது நாடகக் கம்பெனியின் திரைச்சீலையில் இடம் பெற்றிருந்தது, அவரது தொடக்க காலத் தொடர்புகளால்தான். கம்யூனிஸ்டு தலைவர் ஜீவானந்தத்தின் நண்பர் எம்.ஆர்.இராதா.
தனது ஒரு பெண்ணுக்கு ரஷ்யா ராணி என்று பெயர் சூட்டியிருந்தார். எம்.ஜி.ஆர். மீது சுட்ட வழக்கில் அவருக்காக வாதாடியவர் கம்யூனிஸ்டு கட்சியின் என்.டி.

வானமாமலை! பெரியாரின் திராவிடர் கழகச் சித்தாந்தத்தில் பிடிப்பு ஏற்பட்டதை இறுதிவரை இராதா விடவில்லை. பெரியாருக்கு ஏற்பட்ட கண்டன விமரிசனங்கள் இராதாவுக்கும் தொடர்ந்தது. அதைப்பற்றிக் கவலைப்படாமல் நாடகங்களை அரங்கேற்றினார். பிரிட்டிஷ் ஆட்சியில் சுதந்திரப் போராட்டம் பற்றிச் சித்தரிக்கத் தணிக்கை முறை இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் நாத்திகக் கருத்துக்களைச் சொல்லத் தடை இருந்தது. இராதா நாடகத்தின் பெயரை மாற்றித் திரையிட்டுக் கைதாவார். காங்கிரஸ் ஆட்சியில் 59 முறை கைதானாவர் இராதா!.

கட்டணம் செலுத்தாமல் தனது நாடகங்களைப் பார்க்க வரும் உள்ளூர் பிரமுகர்களுக்கு "ஓசியில் பார்ப்போர்களுக்காக" என்று போர்டு மாட்டி ‘ஒதுக்கிய' பெருமை இராதாவையே சாரும்.

வில்லன்-தந்தை-சமூக விமரிசகர்- நகைச்சுவைப் பாத்திரம் என எல்லாவற்றையும் அவர் ஒருவரே ஏற்று நடித்தது தனிச்சிறப்பு. அவரது ஏற்ற இறக்கமுள்ள, கரகரத்து கீச்சுக்குரலாக மாறும் உச்சரிப்பு அவரது சமூக எள்ளலுக்கு பலம் சேர்த்தது. விளம்பரமின்றி உதவி செய்யும் சுபாவம் அவருக்கு உண்டு. அவர் இப்போது இருந்திருந்தால் ‘ராமர் சேது' விவகாரத்தில் ஊர் ஊராகப் போய் அவரது பாணியில் நாடகம் போட்டிருப்பார்!

நன்றி -கீற்று



திங்கள், 10 நவம்பர், 2008

ராஜிவ் காந்தி கொலை வழக்கு சர்ச்சை -காலச்சுவடு கட்டுரை

காலச்சுவடு - (அக்டோபர் 2008 )

02. கொல்லும் அதிகாரம்
- ரவிக்குமார்
கட்டுரை

மரண தண்டனைக்கு எதிரான இந்தக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் மற்றும் பியுசிஎல் அமைப்பினருக்கும் இங்கே வந்திருப் பவர்களுக்கும் வணக்கம். இந்தியாவில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவது பற்றிச் சிறப்பான ஆய்வு நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ள விக்ரம் ஜிட் பத்ராவுக்கும் சுரேஷ், நாகசைலா ஆகியோருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நூலில் குறிப்பிட்டுள்ளதுபோல 1998ஆம் ஆண்டு பியுசிஎல் சார்பில் மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரத்தைப் பாண்டிச்சேரியில் இருந்து நாங்கள் முன்னெடுத்தோம். அப்போது நான் பாண்டிச்சேரி பியுசிஎல்லின் தலைவராக இருந்தேன். அந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ராஜீவ் கொலை வழக்கில் இருபத்தாறு பேருக்கு ஒரேயடியாக மரண தண்டனை விதிக்கப்பட்டபோது அந்தச் சமயத்தில் இலக்கிய மாநாடு ஒன்றில் கட்டுரை வாசிப்பதற்காக ஹைதராபாத் சென்ற நான், அங்கே திரு. பாலகோபால் அவர்களைச் சந்தித்துத் தேசிய அளவில் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்தார்.

ஆந்திராவில் சிலுக்கலூரிபேட் என்ற இடத்தில் பேருந்து ஒன்றை எரித்துப் பலபேர் மரணம் அடைவதற்குக் காரணமாய் இருந்ததற்காக இரண்டு தலித் இளைஞர்கள் அப்போது மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடைய தண்டனையைக் குறைக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்த மனித உரிமை ஆர்வலர்கள் மேற்கொண்டிருந்தார்கள். அதன் காரணமாகத்தான் நான் பாலகோபால் அவர்களை அணுகிப் பேசினேன்.

பாண்டிச்சேரியில் 1998ஆம் ஆண்டு மரண தண்டனையை எதிர்த்த இரண்டு நாள் மாநாட்டை மக்கள் சிவில் உரிமைக் கழகம் ஒருங்கிணைத்தது. அதில் அப்போது தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவியாக இருந்த மோகினி கிரி கலந்துகொண்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு அதிலும் குறிப்பாக, நளினிக்குத் தண்டனையைக் குறைப்பது பற்றித் திருமதி. சோனியா காந்தியிடம் பேசுவதாக மோகினி கிரி அந்த மாநாட்டில்தான் வாக்குறுதி அளித்தார். அதனடிப்படையில்தான் அவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்துதான் சோனியா காந்தியின் தலையீட்டால் இப்போது நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆக, நளினியின் மரண தண்டனை ரத்துசெய்யப்பட்டதற்குப் பாண்டிச்சேரியில் எங்களால் நடத்தப்பட்ட மாநாடுதான் காரணம் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். சிறிய அளவில் நாம் செய்யும் முயற்சிகள் வீணாகிப்போய்விடுவதில்லை. அவற்றுக்கு நிச்சயமாகப் பலன் இருக்கும் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

பாண்டிச்சேரி மாநாட்டைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய இயக்கங்களும் மரண தண்டனையை எதிர்த்துப் பிரச்சாரத்தில் இறங்கின. குறிப்பாகப் பெரியார் திராவிடர் கழகம் இதற்காக நூறு கூட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துப் பல கூட்டங்களை நடத்தியது. திரு. நெடுமாறனும் இந்தப் பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக மக்களைச் சென்றடைவதற்கு இந்தக் கூட்டங்கள் பயன்பட்டன. என்றபோதிலும் தமிழ்த் தேசிய இயக்கங்கள் இதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவில்லை. ராஜீவ் கொலை வழக்கு தவிர, மற்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பற்றி அவர்கள் அக்கறைகாட்டவில்லை. உதாரணமாக, அப்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அது பற்றி யாரும் பேசவில்லை. தமிழ்த் தேசிய இயக்கங்கள் மட்டுமல்ல, மனித உரிமைகளைப் பற்றிப் பேசுவது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சிக்கலானதுதான். ஏனென்றால் மனித உரிமைகளை ஒரு இடத்தில் வலியுறுத்திக்கொண்டு இன்னொரு இடத்தில் கைவிட்டுவிட முடியாது.

பாண்டிச்சேரியில் நடத்தப்பட்ட மாநாட்டில் பல்வேறு சிந்தனையாளர்கள் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்கள். அவற்றையெல்லாம் We the Condemned என்ற தலைப்பில் தொகுத்து நூலாக வெளியிட்டோம். ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அந்த நூல் துரதிர்ஷ்டவசமாகத் தமிழக பியுசிஎல் ஆர்வலர்களோடு முடங்கிவிட்டது. இப்போது விரிவாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. இதற்காகத் தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்ட அனைவரும் நமது பாராட்டுக்குரியவர்கள். இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவது அவசியம். அதற்கு நான் என்னால் ஆன உதவிகளைச் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். மரண தண்டனை பற்றி விவாதித்த பல பேர் அமெரிக்காவில் மரண

தண்டனை விதிக்கப்படும்போது அதில் வெளிப்படும் இனவெறி பற்றி நிறைய ஆய்வுகள் வெளியாகியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அதுபோல இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் அந்தத் தீர்ப்புகளில் இங்கும் அதேபோல மத, சாதி, துவேஷம் வெளிப்பட்டிருக்கும் என்று அப்போது நாங்கள் பேசினோம். இன்று 1950 முதல் 2006 வரை கடந்த ஐம்பத்தாறு ஆண்டுகளில் வெளியான சுமார் எழுநூறு தீர்ப்புகளை ஆராய்ந்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதை எழுதியவர்கள் நமது நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் குற்றவாளிகளின் மதம், சாதி பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படாததால் அது பற்றித் தெளிவாக எதுவும் சொல்ல முடியவில்லை என்று கூறியுள்ளனர். மரண தண்டனைக் கைதிகளின் மதம் மற்றும் சாதியைத் தெரிந்துகொள்வது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. இந்தியச் சமூகத்தில் குறிப்பாக வட இந்தியாவில் எல்லோருடைய பெயரும் சாதிப் பின்னொட்டுடன்தான் முடிகிறது. அவற்றை ஒரு மானுடவியலாளரின் துணையோடு ஆராய்ந்தால் அவர்களின் சாதி, மதம் என்ன என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். பாண்டிச்சேரி மாநாட்டை நடத்தியபோது நான் கும்கும்சாதா என்பவர் எழுதிய 'இண்டியன் ஜெயில்ஸ்' என்ற நூலை வாசித்தேன். அது காஷ்மீர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த மக்பூல்பட் என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறித்து விரிவாக ஆராய்ந்துள்ள ஒரு நூலாகும். அதில் ஆண்டுவாரியாக இந்தியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை பட்டியலாகத் தரப்பட்டிருந்தது. அதை நான் தொகுத்த நூலிலும் வெளியிட்டிருக்கிறேன்.

டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட பிரியதர்ஷினி மட்டூ வழக்கை நாங்கள் தொடர்ந்து கவனித்துவந்தோம். அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபரின் தந்தை பாண்டிச்சேரியில் ஐ.ஜி.யாகப் பணியாற்றியவர் என்பதால் எங்களுக்கு அந்த வழக்குமீது கூடுதல் அக்கறை இருந்தது. அந்த நபருக்குக் கடைசியில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. நான் இப்போது ஜூனியர் விகடனில் எழுதிவரும் பத்தியிலும் அது பற்றி எழுதியிருக்கிறேன். வெகு காலம் தப்பித்துவந்த அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது அது கூடாது என்று வாதிடுவது எனக்கேகூடச் சிரமமாக இருந்தது. மரண தண்டனை எதிர்ப்பு என்பது பொதுப் புத்திக்கு எதிரான ஒரு பிரச்சாரம். அதனால் அது மிகவும் சிரமமான ஒரு காரியமாகும். ஆனாலும் அதை நாம் செய்துதான் ஆக வேண்டும். இன்று தமிழக முதல்வர் கலைஞர் மரண தண்டனையை எதிர்த்துப் பேசி வருவது நம்மைப் போன்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. ஆனால் அண்மையில் நடந்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களை ஒட்டிப் 'பொடா' போன்ற கடுமையான சட்டம் வேண்டுமென்று பிஜேபி போன்ற கட்சிகள் வலியுறுத்துகின்றன. குஜராத் மாநிலத்தில் அத்தகைய சட்டம் ஒன்றை உருவாக்கி, அதைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியிருக்கிறார்கள். பொடா போன்ற சட்டங்கள் மரண தண்டனையை வலியுறுத்துகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த நூலிலும்கூட 'பொடா' வழக்குகளில் எப்படித் தவறாகத் தண்டனைகள் வழங்கப்பட்டன என்பது தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. எனவே பயங்கரவாதச் சட்டங்கள் புதிதாக உருவாக்கப்படாமல் தடுக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்.

அப்சல்குரு வழக்கைப் பற்றிய பிரச்சாரம் நடந்துகொண்டிருந்தபோது நான் ஒரு செய்தியைப் பார்த்தேன். டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்து, திகார் சிறையில் கடந்த அறுபது ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை குறித்த விவரங்களை வாங்கியிருந்தார். அதில் இருபத்து நான்கு பேர் இதுவரை திகார் சிறையில் தூக்கிலிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களது பெயரும் தூக்கிலிடப்பட்ட தேதியும் கொடுக்கப்பட்டிருந்தன. அந்தப் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது அதில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள் என்பதும் அதற்கடுத்து இஸ்லாமியர்கள் என்பது தெரியவந்தன. ஆக, இப்படியான பெயர்களைக் கொண்டே நாம் இந்த வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளின் தன்மையைக் கணித்துவிட முடியும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இந்த ஆய்வு நூலை வெளியிட்டிருக்கிற நண்பர்கள் தங்களிடம் உள்ள விவரங்களை இந்த நோக்கில் மீண்டும் ஆராய்ந்து இதுவரை இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள மரண தண்டனைத் தீர்ப்புகளின் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இத்தகைய அரிய நூலை வெளியிடும்போது, இந்த நிகழ்ச்சியில் சமூகத்தில் கருத்துருவாக்கத்தைச் செய்கின்ற தரப்பினரை நாம் ஈடுபடுத்துவது அவசியம். நமது சமூகத்தில் ஒரு கருத்தை வலுவாக எடுத்துக்கூறக்கூடிய ஆற்றல் எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் உள்ளது. எனவே இனியாவது இத்தகைய பிரச்சாரத்தில் நாம் தவறாமல் ஒரு எழுத்தாளர், ஒரு பத்திரிகையாளர் என இடம் பெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பாண்டிச்சேரியில் மாநாடு நடத்தியதற்குப் பிறகு நான் தமிழ்நாட்டின் அறிவுஜீவிகளான படைப்பாளிகள் மத்தியில் இந்தப் பிரச்சாரத்தை எடுத்துச்செல்ல விரும்பினேன். அதற்காக எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமியை அணுகினேன். அவரோ, தனக்கு இதில் போதிய அனுபவம் இல்லை, எனவே நீங்கள் எஸ்.வி. ராஜதுரையைச் சேர்த்துக்கொண்டு இதைச் செய்யுங்கள் என்று எனக்கு ஆலோசனை கூறினார். அதன்பிறகு நான் எஸ்விஆரோடு இணைந்து மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்களின் மாநாடு ஒன்றைச் சென்னையில் நடத்தினேன். அதில் சுந்தர ராமசாமியும் கலந்துகொண்டு பேசினார். ஆனால் அந்த முயற்சி அத்துடன் நின்றுவிட்டது. அதன் பிறகு எந்த எழுத்தாளரும் அதை முன்னெடுத்துச் செல்லவில்லை. இப்போது மீண்டும் நாம் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். பியுசிஎல் போன்ற இயக்கத்துக்கு எத்தனையோ விதமான மனித உரிமை மீறல்கள் பற்றிப் பிரச்சாரம் செய்ய வேண்டிய தேவையிருக்கிறது என்றபோதிலும் ஒரு குறிப்பிட்ட காலம்வரை மரண தண்டனை ஒழிப்பு என்ற ஒற்றை நோக்கத்தோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் நிச்சயம் அதற்கு ஒரு பலன் இருக்கும். மரண தண்டனையை எதிர்க்கின்ற தமிழக முதல்வர் போன்றோரையும் இதில் நாம் அணுகலாம். இப்போது 123 ஒப்பந்தம் பற்றி அதிகம் பேசப்படுகிறது. நாம் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டால் இந்தியாவை 135 நாடுகளின் பட்டியலில் சேர்த்துவிட முடியும். அதாவது இன்று உலக நாடுகளில் 135 நாடுகள் மரண தண்டனையைப் பின்பற்றுவது இல்லை. அந்தப் பட்டியலில் இந்தியாவை நாம் இடம்பெறவைத்துவிட முடியும்.

மரண தண்டனை விதிக்கப்படுவது என்பது இப்போது பெரும்பாலும் நீதிபதிகளின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் சார்ந்ததாகவே இருக்கிறது. வி. ஆர். கிருஷ்ணய்யர், பி. என். பகவதி என்று நாம் சில நீதிபதிகளின் பெயர்களை இப்போது சொல்கிறோம் என்று சொன்னால் அவர்களின் தனிப்பட்ட ஆளுமை சார்ந்தே அதைக் கூறுகிறோம். வழக்கறிஞராக இருந்தபோதே மக்கள் நலனில் அக்கறையோடு இருந்த திரு. சந்துரு அவர்கள் இப்போது உயர் நீதிமன்ற நீதிபதியான பிறகு, கடந்த ஒரு மாதத்துக்குள் மிக முக்கியமான ஐந்து தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். எனவே யார் நீதிபதியாக வருகிறார்கள் என்பது முக்கியம். அண்மையில் நீதித் துறையில் மலிந்துவிட்ட ஊழல் பற்றிச் செய்திகள் வெளியாகி வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் நீதித் துறை ஊழியர்களின் பொதுவைப்பு நிதிப் பணத்தைக் கையாடல் செய்த வழக்கில் ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி, எட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட நீதிபதிகளின் பெயர் அடிபடுகிறது. அது பற்றி சிபிஐ விசாரணை செய்யப்படலாம் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன. அரியானா மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த இரண்டு பெண் நீதிபதிகள் பதினைந்து லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கொன்றில் விசாரணைக்கு ஆளாகி உள்ளனர். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சுமித்ரா சென் என்பவர்மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். சுமித்ரா சென் வழக்கறிஞராக இருந்தபோது ஒரு வழக்கில் ரிசீவராக நியமிக்கப்பட்டு அந்த ரிசீவரின் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கென்று நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தொகையை அவர் தனது சொந்தக் கணக்கில் போட்டுக்கொண்டதுதான் அவர்மீதான குற்றச்சாட்டு.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருந்த சுமித்ரா சென் எப்படி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்று இப்போது கேள்விகள் எழுந்துள்ளன. மரண தண்டனையை எதிர்த்துப் பிரச்சாரம் மேற்கொள்கிற நாம், இப்போதைக்கு மரண தண்டனையைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால், அத்தகைய உணர்வு கொண்ட நீதிபதிகள் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வருகிறார்களா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார் என்றால் அதற்குமுன் செனட்டில் உள்ள சப்-கமிட்டியில் அவரைப் பற்றி விரிவான விசாரணை நடத்துகிறார்கள். அந்த நேரத்தில் பத்திரிகைகளும் அவரைப் பற்றி அலசி ஆராய்கின்றன. இதனால் நீதிபதி நியமனத்தில் ஒரு வெளிப்படைத்தன்மை காப்பாற்றப்படுகிறது. நமது நாட்டிலும் அத்தகைய வெளிப்படைத் தன்மையை நாம் வலியுறுத்த வேண்டும். எனவே செஷன்ஸ் நீதிபதியாக இருக்கும்போது மரண தண்டனை அளிப்பவர்கள் உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் செல்கிறார்களா என்பதை நாம் கண்காணிக்க வேண்டும். இப்படி நீதிபதிகள் நியமிக்கப்படும்போது நாம் ஒரு குறுக்கீட்டைச் செய்தோமேயானால் நிச்சயம் நல்ல நீதிபதிகள் உயர் நீதிமன்றத்துக்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்படும். எனவே மரண தண்டனை எதிர்ப்புப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக இதையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

மரண தண்டனையை இந்திய அளவில் ரத்துசெய்வதை விடவும், அதற்கு முன்பாக மாநில அளவில் ஐபிசி, சிஆர்பிசி முதலிய சட்டங்களில் திருத்தங்கள் செய்வதன் மூலம் இங்கே மரண தண்டனையை நாம் ஒழித்துவிட முடியும் என்று சுதா ராமலிங்கம் குறிப்பிட்டார்கள். மரண தண்டனைக்கு எதிரான கருத்துடைய டாக்டர் கலைஞர் முதல்வராக இருக்கும் இந்த நேரத்தில் இதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்வது பொருத்தமானதாக இருக்கும். இத்தகைய திருத்தங்களைச் செய்வதற்கான தனிநபர் மசோதாவைத் தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவருவதற்கு நான் தயாராக இருக்கிறேன். அதைத் தயாரிப்பதில் சுரேஷ், சுதா ராமலிங்கம் போன்றவர்கள் எனக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எங்கள் கட்சிக்கு இரண்டு உறுப்பினர்கள்தான் சட்டமன்றத்தில் இருக்கிறோம் என்றபோதிலும், இதற்கு ஆதரவாக இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை நாம் அணுகலாம்.

1995இல் நாம் மரண தண்டனையை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தபோது நம் கையில் போதுமான புள்ளி விவரங்கள் இல்லை. பெரும்பாலும் அனுமானங்களின் அடிப்படையில்தான் நாம் அப்போது பேசினோம். ஆனால் இன்று கடந்த ஐம்பத்தாறு ஆண்டுகளாக வழங்கப்பட்ட பல்வேறு தீர்ப்புகளை ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வு நூல் நம்மிடம் இருக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான மிகப் பெரிய ஆயுதமாக இது திகழ்கிறது. எனவே இப்போது முன்னைவிடவும் பல மடங்கு அதிகமான ஊக்கத்தோடு நாம் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். எனவே ஆம்னஸ்டி இண்டர்நேஷனலும் பியுசிஎல் அமைப்பும் இதைப் பரவலாகத் தமிழகமெங்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதற்கு நான் எப்போதும் உங்களோடு உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொண்டு வாய்ப்புக்கு நன்றிசொல்லி அமர்கிறேன். வணக்கம்.
(செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை ஐகஃப் அரங்கில் நடந்த மேற்குறிப்பிட்ட நூலின் அறிமுக விழாவில் பேசியது. நன்றி: http://www. tamilbodhi.wordpress.காம்

நன்றி-தினமலர்

வெள்ளி, 31 அக்டோபர், 2008

விஜயகாந்த் -வேலை வாய்ப்பு ரகசியம் ...

இலங்கை பிரச்சனையை எதிர் கட்சிகளிடம் கொண்டு செல்லாமல் ,,அனைத்து பிரச்சினைகளையும் சாமர்த்தியமாக ,மறைத்து தன்னை முன்னிலை படுத்தி கொண்டார் கலைஞர் ....

மேலும் படிக்க....

http://www.dinamalar.com//piraidhalgal/kalki/piraithal_kalki2.asp?

வியாழன், 23 அக்டோபர், 2008

பிளாஸ் நியூஸ் ;வைகோ கைது

வைகோ இன்று மதியம் கைது செய்யப்பட்டார் ;திருமா வளவனும் கைது செய்யபட்டார் ;விடுதலை புலிகளுக்கு அதரவாக ,கூட்டத்தில் பேசியதற்காக கைது செய்யப்பட்டதாக தெரிகிறது;
, ரயில் மறியலுக்கு முயன்றதாக திருமா வளவன் கைது செய்யப்பட்டார் .நேற்றைய தனது அறிகையில் ஜெயலலிதா ..தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுபவர்களை இந்த அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது;நான் ஆட்சியில் இருந்திருந்தால் இந்நேரம் அவர்கள் கைது செய்ய பட்டிருப்பார்கள்.தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது இந்திய இறையாண்மை க்கு ஊரு விளைவிக்கும் செயல் என கண்டித்துஅறிக்கை விட்டது நினைவிருக்கலாம்;பிரிவினை வாதத்தை தூண்டியதாக வைகோகைதுக்கு காரணம் சொல்ல பட்டுள்ளது ;இயக்குனர் சீமானும் ,அமீர்,பாரதிராஜா ,கண்ணப்பனும் கைது ஆவார்களா ..

பிரிவினை எனும் வைகோ வின் அந்த கருத்தை படிக்க ;


."ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில் ம.தி.மு.க., சார்பில் கருத்தரங்க கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில், புலிகள் ஆதரவு வீடியோ காட்சிகள், இரண்டு மணி நேரம் ஒளிபரப்பப்பட்டன.
கூட்டத்தில் ம.தி.மு.க., அவைத் தலைவர் கண்ணப் பன் பேசியதாவது:
புலிகளை பயங்கரவாதிகள் என, தமிழ் துரோகிகள் சொல்கின்றனர். அகிம்சை போராட்டத்தில் வெற்றி பெறாததால் தான் ஆயுதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தமிழ்நாடு, தனி நாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடும் மலரும்.இந்திய இறையான்மையை பிரதமரும், முதல்வரும் காப்பாற்ற மாட்டார்கள். அனைத்து கட்சிகள் கூட்டத்தின் முடிவின்படி 29ம் தேதி ராஜினாமா கடிதம் யார் கொடுக்கின்றனர் எனப் பார்க்கலாம். "பிரதமர் நடவடிக்கை எடுத்துவிட்டதால், தி.மு.க., எம்.பி.க்கள் ராஜினாமா செய்யத் தேவையில்லை' என முதல்வர் கருணாநிதி அப்போது சொல்வார்.இலங்கைக்கு அளித்துவரும் ராணுவ உதவியை திரும்பப் பெற வேண்டும். புலிகள் மீதான தடையை ரத்து செய்ய வேண்டும். தனி ஈழத்திற்கு உரிய மரியாதையை தர வேண்டும்.இவ்வாறு கண்ணப்பன் பேசினார்.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது:
பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையுடன் இலங்கைத் தமிழர்கள் இருக்கின்றனர். புலிகள் வேறு; தமிழர்கள் வேறு அல்ல. நாங்கள் வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல. எது வன் முறை, எது உரிமை என்று பிரித்துப் பார்க்க வேண்டும்.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், சுதந்திரத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியபோது, அதற்கு ஆதரவு அளித்தனர். புலிகள் துப்பாக்கி ஏந்தினால் தவறு என்கின்றனர். "இலங்கைக்கு ராணுவ உதவி செய்ய மாட்டேன்' என்று பிரதமர் எனக்கு அளித்த வாக்குறுதியை நம்பினேன்; ஆனால், அவர் ஏமாற்றிவிட்டார்.
துரோகத்திற்கு என்ன தண்டனை? : புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்திய ராணுவம் தகர்த்தது. கடல் புலிகளை அழிக்க இந்திய ராணுவம் தகவல் கொடுத்து உதவியது. நான்கு ஆண்டுகளாக புலிகளை அழிக்க, இந்தியா திட்டமிட்டு ராணுவ உதவி செய்துள் ளது. இலங்கையின் இனப்படுகொலைக்கு இந்திய ராணுவம் உதவுகிறது.இந்திய அரசின் துரோகத்திற்கு என்ன தண்டனை? இலங்கையின் உள் நாட்டு பிரச்னைக்கு இந்தியா ஏன் ஆயுத உதவி செய்கிறது? தமிழன் சிந்திய ஒவ்வொரு சொட்டு ரத்தத் திற்கும், ஒவ்வொரு தமிழனின் சாவுக் கும் மத்திய அரசும், அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் பொறுப்பு.
ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை : மத்திய அரசு செய்த துரோகத்தை எப்படி மன்னிக்க முடியும்? இலங்கையில் எப்போதோ தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். அதைத் தடுத்தது இந்தியா தான். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தமிழர்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை. இலங்கையில் ஒருமைப்பாட்டைக் காக்க, இந்தியாவின் ஒருமைப் பாட்டை குலைத்துவிடாதீர்கள். இந்தியா, புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். துன்பியல் நிகழ்வுகளை பற்றி பேசாதீர்கள். போரை நிறுத்துங்கள். உலகில் அனைத்து நாடுகளும் புலிகளுக்கு தடை போட, இந்திய அரசு தான் காரணம்.இலங்கைத் தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை வந்தால், வைகோ முதல் ஆளாக களத்திற்கு வந்து நிற்பான். இதற்காக நாடு முழுவதும் இளைஞர்களை திரட்டுவேன். தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்தால், அதற்கு தமிழக மக்கள் தக்க தண்டனை தருவர். தமிழ் ஈழம் மலரும்; அதுவே எங்கள் தாகம்.
இவ்வாறு வைகோ பேசினார்.

நன்றி-தினமலர் ,தினமணி

வியாழன், 16 அக்டோபர், 2008

அதிசயம் -வியர்வை சிந்தும் பெருமாள்

தரணியை ஆளும் தாமோதரன், தன் சகோதரியுடன் சேவை சாதிக்கும் தலம், பெரிய மாத்தூர். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர், திருமாலின் திருவுருவப் படத்தை வைத்து பஜனை மடமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பல தெய்வ சிலாவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் என்ற பெயரில் விளங்கி வருகிறது.

கோயிலுக்கு வெளியே கதை உருவில் பதினொரு அடி உயர ஆஞ்சநேயரும் இருபத்தொரு அடி உயர கருடாழ்வாரும் வடக்கு நோக்கி தரிசனம் தருகிறார்கள். மூன்று நிலை ராஜகோபுரத்தில் தாயார் சமேத பெருமாள், நரசிம்மர், ஆஞ்சநேயர், கண்ணன், கருடாழ்வார் ஆகியோர் கதை உருவில் காட்சி தருகின்றனர். கோயிலுக்குள் நுழைந்ததும் தியான மண்டபத்தில் மூலவரை நோக்கி கூப்பிய கரங்களுடன் கருடாழ்வார் சேவை சாதிக்கிறார்.

கருவறையில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் அன்பே உருவாக அருளாசி புரிகின்றனர். அருகில் அவர்களின் உற்சவத் திருமேனியும், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. பெரும் வரப்பிரசாதியான பெருமாள் மீது தினமும் காலையில் சூரிய ஒளி படர்ந்து செல்லுமாம். அப்போது பெருமாளின் திருமுகத்தில் முத்து முத்தாய் வியர்வை அரும்பும் காட்சி காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும் என்கிறார்கள்.

கருவறைக்கு முன்பாக தனி சன்னதியில் தெற்கு நோக்கி ராமானுஜரின் தரிசனம் கிட்டுகிறது. ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திர நாளின் போதும் ராமானுஜருக்கு திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு அர்ச்சனை, ஆராதனைகள் நடைபெறுகின்றன. பிராகார வலம் வருகையில் வடக்கு நோக்கி அனுமன் சேவை சாதிக்கின்றார். மூல நட்சத்திரத்தன்றும், அமாவாசை தினங்களிலும் இவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடக்கின்றன. அருகில் கதை உருவ ராதா கிருஷ்ணரின் தரிசனம் கிட்டுகிறது.

கருவறைக்கு வலப்பக்கத்தில் அவர் மேல்மங்கைத் தாயார் சிறிய சன்னதியில் அருள்கின்றாள். அதையடுத்து சக்கரத்தாழ்வாருக்கு சித்திரை நட்சத்திர நாளன்றும் லக்ஷ்மி நரசிம்மருக்கு சுவாதி நட்சத்திர நாளன்றும் திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது. ஆடிப்பூரத்தன்று இக்கோயிலில் அருளும் ஆண்டாளுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது. குழந்தை பாக்யம் வேண்டுவோர் அதில் கலந்து கொண்டு ஆண்டாளுக்கு வளைகாப்பு நடத்தினால் விரைவில் அவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும் என்கிறார்கள்.

கருவறைக்கு இடதுபுறம் மாரியம்மனும், அன்னபூரணியும் ஒரே சன்னதியில் அருள்கின்றனர். அருகில் சுயம்பு மாரியம்மனின் திருவுருவம் உள்ளது. சன்னதிக்கு வெளியே விநாயகரும், முருகனும் தரிசனம் தர, கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, புவனேஸ்வரி, விஷ்ணு, துர்க்கை அருள்கின்றனர். ஈசான மூலையில் நவகிரகங்களும் உண்டு. திருவோண நட்சத்திர நாளில் காலை ஏழு மணியளவில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், அன்று மாலை ஏழு மணியளவில் ஊஞ்சல் சேவையும் நடைபெறும். மார்கழி மாதம் ஆண்டாள் - ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெறுகிறது. திருமணமாகாதவர்கள், இதில் கலந்து கொண்டால் வெகு விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடைபெறுமாம். ஆடி, சித்திரை, தைமாத பௌர்ணமி நாட்களில் விசேஷ விளக்கு பூஜை நடக்கிறது. நவராத்திரியில் கொலு வைத்து விசேஷ பூஜையும் உண்டு. புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும், ஒவ்வொரு அலங்காரத்தில் பெருமாள் காட்சி தருவார்.

பெரிய உற்சவமாக நான்காவது சனிக்கிழமையன்று பிரம்மோற்சவம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் 10.10.2008 வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கி மறுநாள் சனிக்கிழமை திருமஞ்சனம் அடுத்த நாள் சுவாமி வீதியுலா என மூன்று நாட்கள் சிறப்பிக்கப்படவுள்ளது. காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இக்கோயிட்லஞ்கக்எகு நீங்களும் ஒருமுறை வந்து பெருமாளை சேவித்து புண்ணியம் பெறுங்களேன்!

- மு.வெஙகடேசன்.

நன்றி-குமுதம் பக்தி தினமலர்